Aval Awards: 'பெண்ணென்று கொட்டு முரசே!’ - அருணா ராய் முதல் நிமிஷா வரை; இன்று அவள் விருதுகள் | Live Blog
யாருக்கு என்ன விருதுகள்?
இந்த ஆண்டு...
பெண்கள் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைகளுக்காக 80 வயதைக் கடந்தும் களமாடி வரும் அருணா ராயின் கைகளைச் சென்றடைகிறது ‘அவள் ஆளுமை’ விருது.
யதார்த்த நடிப்பால் நம்மை ஈர்க்கும் நித்யா மெனனுக்கு ‘Extraordinary Performer’ விருது வழங்கிக் கௌரவிக்கிறது அவள் விருதுகள்.
75 ஆண்டுக்கால ஆசிய விளையாட்டு வரலாற்றில், போல் வால்ட் பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்ற பரணிகா இளங்கோவனுக்கு ‘சிங்கப்பெண்’ விருது வழங்கிச் சிறப்பிக்கிறது அவள் விருதுகள்.
இன்னும் பல விருதுகள் பல சாதனை மங்கைகளின் கைகளைச் சென்றடைய உள்ளன.
யாருக்கு என்ன விருதுகள் என்பதை இந்த லிங்க்கில் தெரிந்துகொள்ளுங்கள்.
'பெண்ணென்று கொட்டு முரசே’ என்று ஒவ்வொரு ஆண்டும் சாதனைப் பெண்களைக் கௌரவித்துக் கொண்டாடி மகிழ்கிறது அவள் விருதுகள்.
இந்த ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்குச் சாதனை மகுடம் சூட்ட உங்களை அன்புடன் வரவேற்கிறது அவள் விருதுகள்.
விருது நிகழ்வுகளை எங்களுடன் இணைந்து இந்த Live Blog-ல் நீங்களும் கண்டு ரசிக்கலாம்... களிப்படையலாம். வாருங்கள்... இணைந்திருக்கலாம்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)