"ஜெயலலிதா மேடம் நேரு ஸ்டேடியத்தைக் கட்டினப் பிறகு விளையாட்டு கட்டமைப்பு உருவாகவில்லை" - ஆதவ் அர்ஜுனா
அவள் விகடன் விருது நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா, "ஜெயலலிதா மேடம் கொண்டுவந்த திட்டத்தில் விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்தவன் நான். 1994-ல் ஜெயலலிதா மேடம் நேரு ஸ்டேடியத்தைக் கட்டினார்கள்.
அதன் பிறகு விளையாட்டுக்காக எந்தக் கட்டமைப்பும் உருவாக்கப்படவில்லை. இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டை விளையாட்டுத் தலைநகரமாக மாற்றிக்காட்டுவோம்.

அமெரிக்காவில் செரீனா வில்லியம்ஸைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அவர் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லும்போது அது ஒட்டுமொத்த இனத்துக்குமான அங்கீகாரமாக இருக்கும் என்பார்கள்.
அதே மாதிரி, பரணிகாவும் தடைகளைத் தாண்டி வெல்கையில், அவர் எல்லாருக்குமான இன்ஸ்பிரேஷனாக மாறுகிறார். இணையரில் ஒருவர் வெல்லும்போது, இன்னொருவர் அவருக்கு ஒத்துழைத்து ஊக்குவிக்க வேண்டும்.
பரணிகாவின் கணவர் அப்படியானவராக இருக்கிறார். பரணிகா அடுத்து ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை வெல்ல வேண்டுமென்பதே எங்களின் இலக்கு.’’

What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)