``ஆட்சியருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா? நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்களா?" - திருமாவளவன் கேள்வி

Nov 26, 2026 - 18:31
0
``ஆட்சியருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா? நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்களா?" - திருமாவளவன் கேள்வி

ஆட்சியர் விவகாரத்தை தொடர்ந்து பேசிவருவதன் மூலம் ஆட்சியருக்கு நெருக்கடியை உள்ளாக்குகிறார்களா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மாவட்ட ஆட்சியருக்கு அந்தக் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர் மன உளைச்சலைத் தரும் வகையில் வாட்ஸ்அப்பில் செய்திகள் அனுப்பி இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். இப்போதும் அதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறோம். மாவட்ட ஆட்சியர் இப்போது வெளிப்படையாகப் புகார் அளித்திருக்கிறார் என்ற தகவல் உறுதியாகி இருக்கிறது. அதன் பின்னர் அரசு வேகமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அருள் விக்னேஷ்

அந்தக் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. ஆகவே, மேற்கொண்டு இதில் சிபிஐ (CBI) தலையிடக்கூடிய அளவுக்கு எந்தத் தேவையும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்து 116 நாள்களாகியிருக்கலாம். ஆனால் ஆட்சியர் புகார் கொடுத்து 116 நாள்கள் ஆகிவிடவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் வழியாகத்தான் நமக்கெல்லாம் தெரிய வந்தது.

அண்மையில்தான் ஆட்சியர் புகார் கொடுத்ததாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சம்பவம் நடந்தபோதே அவர் எழுத்துபூர்வமான புகாரைத் தரவில்லை. இதை ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து பேசி வருவதன் மூலம், ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா அல்லது அவரை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்களா என்று தெரியவில்லை. அவரே முன்வந்து புகார் கொடுத்த பிறகு அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருவதாகத்தான் நம்புகிறேன். உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகி இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User