``தவெக ஆட்சியைக் கலைக்க வேண்டும்; ஆளுநர் அர்லேகர் சொன்ன பதில்..!" - நயினார் நாகேந்திரன்

Nov 26, 2026 - 21:00
0
``தவெக ஆட்சியைக் கலைக்க வேண்டும்; ஆளுநர் அர்லேகர் சொன்ன பதில்..!" - நயினார் நாகேந்திரன்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது. ஆனால், அந்த உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் சென்று சந்தித்ததுப் பேசினார்.

ஆளுநர் அர்லேகர் - நயினார் நாகேந்திரன்
ஆளுநர் அர்லேகர் - நயினார் நாகேந்திரன்

அப்போது அவர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசு மீறியுள்ளதாகக் கூறி, தமிழக அரசைக் கலைக்க வேண்டும் எனப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``விஜய் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, ஆளுநரிடம் பாஜக சார்பாக மனு அளித்துள்ளோம். நீதிமன்ற உத்தரவைத் அரசு அவமதித்துள்ளதுடன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் புறக்கணித்துள்ளது. எனவே, இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆளுநர் இது குறித்து விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஜூன் மாதமே புகார் மனு கொடுத்துவிட்டார். அது முதலமைச்சரின் காதுகளுக்குக் கேட்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 660 கொலைகள் நடைபெற்றுள்ளன. சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றாலும், காவல்துறை எங்கு எந்த நடவடிக்கையை எடுத்தது என்றே தெரியவில்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பெரும்பான்மை மக்களின் உணர்வாக உள்ள திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படவில்லை. அங்கு வந்திருந்த காவல்துறை அதிகாரிகள் உண்மையான அதிகாரிகள்தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நேற்று முதலீட்டு மாநாடு நடத்தியிருக்கிறார்கள். அதெல்லாம் வெறும் கண்துடைப்புதான். ஏனென்றால், யார் யார் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்திருக்கிறார்கள், எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) போடப்பட்டிருக்கின்றன என்று வெளிப்படையாகச் சொல்லவில்லையே. ஏற்கெனவே வரவிருந்த உபரித் தொழில் பிரிவுகள் (Ancillary units) இன்று 15,000 கோடி ரூபாய் மதிப்பில் வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டன. அதைக் காப்பாற்ற முடியாமல், இது போன்ற மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் த.வெ.க-வினரே முதலீட்டாளர்களாகப் பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். பாலியல் சீண்டல் சம்பவங்கள் தொடங்கி, கொலைகள், முதலீடுகள் என எல்லாமே தவெக-தான்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User