திருப்பதி கோயில்: 121 கிலோ தங்க ஆபரணங்கள் நன்கொடை; யார் இந்த வர்தமான் ஜெயின்?
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) ஒரே பக்தரிடமிருந்து சுமார் ரூ.206 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்படுகிறது.
சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு தனி நபரால் கோயிலுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய நன்கொடையாக இது கருதப்படுகிறது. இந்த அர்ப்பணிப்பு நிகழ்வில் ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு திருமலை கோயிலில் நேரில் கலந்து கொண்டு பார்வையிட உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்கம் நன்கொடை வழங்கும் விருப்பத்துடன், அடையாளம் தெரிவிக்க விரும்பாத பக்தர் ஒருவர் சுமார் 15 மாதங்களுக்கு முன்பு தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி சி.வெங்கையா சௌத்ரியை அணுகியுள்ளார்.

விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, சுவாமியின் அன்றாட வழிபாடு மற்றும் விசேஷ அலங்காரங்களுக்காக ஒன்பது செட்கள் மற்றும் 47 தனிப்பட்ட ஆபரணங்களைக் கொண்ட பிரமாண்ட நகைத் தொகுப்பை உருவாக்க அந்தப் பக்தர் ஏற்பாடு செய்தார்.
இந்த நகைத் தொகுப்பில் கிரீடம், ஒட்டியாணம், புஜகீர்த்திகள், சங்கு - சக்கரம், அபய ஹஸ்தங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆகம சாஸ்திர மரபுகள் மற்றும் தேவஸ்தான விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்த ஆபரணங்கள் 15 மாத காலத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி திலீப் குமார் வி.லக்கி, அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கிய 101 கிலோ தங்க நன்கொடையை இந்தத் தொகை விஞ்சுவதாக வெங்கையா சௌத்ரி தெரிவித்துள்ளார். பக்தர்களின் காணிக்கைகளால் திரட்டப்பட்ட 11 டன்னுக்கும் அதிகமான தங்க இருப்பு ஏற்கனவே தேவஸ்தானத்திடம் உள்ளது.
மேலும், திருமலை கோயிலுக்கு மாதந்தோறும் ரூ. 120 கோடி முதல் ரூ. 140 கோடி வரை ரொக்கக் காணிக்கையும், சுமார் 100 முதல் 120 கிலோ வரை தங்கமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்கொடை கொடுத்தவர் யார்?
திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) 121 கிலோ தங்க ஆபரணங்களை நன்கொடையாக வழங்கியவர், 'Access Healthcare' மற்றும் 'Asia Chennai Engineering' நிறுவனங்களின் நிறுவனரான வர்தமான் ஜெயின் எனக் கூறப்படுகிறது.
2025-ம் ஆண்டில் 'ஆக்சஸ் ஹெல்த்கேர்' நிறுவனத்தில் இருந்த 70 சதவீதப் பங்குகளை, சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வர்தமான் ஜெயின் விற்பனை செய்தார். அதிலிருந்து சிறு பகுதியை திருப்பதி கோயிலுக்கு வழங்கியிருக்கிறார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வர்தமான் ஜெயின் ஏற்கெனவே பல்வேறு நன்கொடைகளை வழங்கியுள்ளார். கடந்த மே 2026-ல் மின்சாரப் பேருந்துகளை வழங்கியிருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (SVBC) மேம்பாட்டிற்காக ரூ. 7 கோடியும், தேவஸ்தானத்திற்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நாணயம் தரம் பிரிக்கும் இயந்திரத்தையும் அவர் நன்கொடையாக அளித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)