"6 மொழிகள் தெரியும்; அடுத்து சைகை மொழி கத்துக்கணும்னு நினைக்கிறேன்"- நித்யா மெனென்

Nov 27, 2026 - 00:00
0
"6 மொழிகள் தெரியும்;  அடுத்து சைகை மொழி கத்துக்கணும்னு நினைக்கிறேன்"- நித்யா மெனென்

அவள் விகடனின் `Extraordinary Performer’ விருதை நடிகை நித்யா மெனெனுக்கு இயக்குநர் ஆர்ஜே பாலாஜி வழங்கினார்.

விருது பெற்ற பின் நித்யா மெனென், "``நாம் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், சேவை செய்யும் மனதுடையவராக இருக்க வேண்டும். விஜயா போன்றவர்களைப் பார்க்க இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.

நித்யா மெனென்
நித்யா மெனென்

எனக்குப் புதிய மொழிகளைப் படிக்க ஆர்வம் உண்டு. ஆறு மொழிகள் எனக்குத் தெரியும். இப்போது 7-வது மொழி கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது சைகை மொழியையும் படிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

ஆண்கள் செய்வதை நாமும் செய்ய வேண்டுமென்பது Feminism-ஆகப் பார்க்கப்படுகிறது. ஆனால், பெண்களின் வலிமையை, சக்தியை வலுவாக வெளிக்காட்டுவதே Feminism என நினைக்கிறேன்" என்று பேசினார்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் குறித்து பேசும்போது, " `மெர்ச’லில் நான் 'தளபதி' என்று சொல்வது விஜய் சாரின் அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும் என்றார்.

ஒரு மனிதர், தன்னால் எவ்வளவு உச்சத்தை எட்ட முடியுமோ, அந்த உச்சத்தை எட்டுவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.’’ என்று பகிர்ந்தார்.

Vikatan - Aval Awards Sponsors
Vikatan - Aval Awards Sponsors

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User