"சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட உங்களுக்கு இனி சிக்கல் தான் விஜய் அவர்களே.!" - நயினார்
"சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே ‘Accused’ ஆக்கி வைத்துள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்? இப்படிப்பட்ட ஒருவர் இனியும் தமிழகத்தின் முதல்வராகத் தொடரலாமா?" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ஒரு தவறை மறைக்க ஓராயிரம் தவறுகளை செய்துள்ளீர்கள் திரு. விஜய் அவர்களே! சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட உங்களுக்கு இனி சிக்கல் தான்!
‘திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்து எந்த கடிதமும் ஆலயத்திற்கு வழங்கப்படவில்லை, நாங்கள் எதுவும் அதில் கருத்துக் கூறவில்லை’ என திருப்பரங்குன்றத்தின் ஸ்தானீக பட்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஆணவத்தையும், விஜய் அரசின் அரசியல் பித்தலாட்டங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது!
ஒரு தவறை மறைக்க ஓராயிரம் தவறுகளை செய்துள்ளீர்கள் திரு. @TVKVijayHQ அவர்களே! சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட உங்களுக்கு இனி சிக்கல் தான்!
— Nainar Nagenthran (@NainarBJP) November 26, 2026
‘திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்து எந்த கடிதமும் ஆலயத்திற்கு வழங்கப்படவில்லை, நாங்கள் எதுவும் அதில் கருத்துக்… pic.twitter.com/BNnQkzYNWy
ஆக, திருக்கோயிலில் பரம்பரை பரம்பரையாக ஆகம விதிகளின் படி பூஜை செய்து வரும் ஸ்தானீக பட்டர்களை, கடவுள்களின் புனிதத்தையும் கோயில்களின் அடையாளங்களையும் தங்களது பூஜை புனஸ்காரம் மூலம் இன்றும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் ஸ்தானீக பட்டர்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? ஆலயத்தின் ஆகம விதிகள் தொடர்பாக யாரிடம் ஆலோசனை பெறப்பட்டது? அறங்காவலர் குழு நேற்று வெளியிட்ட அவசர அறிக்கையை, மாவட்ட ஆட்சியர் முறையாக ஆய்வு செய்து சரிபார்க்காதது ஏன்?
அப்படியெனில் அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் பொய் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அரசியலமைப்பு சட்டத்தை மீண்டும் மீண்டும் தெரிந்தே அவமதிக்கிறதா தவெக அரசு? சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே ‘Accused’ ஆக்கி வைத்துள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்? இப்படிப்பட்ட ஒருவர் இனியும் தமிழகத்தின் முதல்வராகத் தொடரலாமா?
அதுமட்டுமன்றி, தங்களின் பித்தலாட்டங்களை வெளிக்கொண்டு வந்துவிட்டார் என்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர், தவெக அரசின் ஏவல்துறையுடன் திருப்பரங்குன்றம் ஸ்தானீக பட்டரின் வீட்டிற்கே சென்று, மறு அறிக்கை வெளியிடுமாறு அவரை மிரட்ட முயன்ற நிலையில், தமிழக பாஜகவினரும் இந்து முன்னணியினரும் அங்கு திரண்டதால், வேறு வழியின்றி அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இச்சம்பவம், தவெக அரசு தமிழகத்தை ஆளத் தகுதியற்றது என்பதை மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது!

எனவே, பொய் அறிக்கை மூலம் சட்டத்தையும் மக்களையும் ஏமாற்ற நினைத்த தவெக அரசுக்கு சட்டமும் அந்த தெய்வமும் தக்க பதிலடி கொடுக்கும்! தவெக அரசின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்த ஸ்தானீக பட்டர்களுக்கு பாஜக என்றும் உறுதுணையாக நிற்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)