Aval Awards: ``அந்தக்காலத்து ஏ.ஐ சித்ரா; அவ்ளோ Perfect-ஆ பாடுவாங்க!’’ - ஶ்ரீனிவாஸ்

Nov 26, 2026 - 19:30
0
Aval Awards: ``அந்தக்காலத்து ஏ.ஐ சித்ரா; அவ்ளோ Perfect-ஆ பாடுவாங்க!’’ - ஶ்ரீனிவாஸ்

'கலைநாயகி' விருது பெற்ற கே.எஸ்.சித்ரா குறித்து, பாடகர் ஸ்ரீனிவாஸ் பேசும்போது, ``பள்ளி, கல்லூரி காலத்தில் நாங்கள் ஓரளவுக்கு பாடுவோம். ஆனால், சித்ரா அப்போதே வேறு கிரகத்திலிருந்து வந்ததைப்போல பாடுவார். இப்போது யார் வேண்டுமானாலும் பாடலாம்.

இப்போது ஏ.ஐ எல்லாத்தையும் பர்ஃபெக்ட்டா தருது. ஆனா, அந்தக்காலத்து ஏ.ஐ சித்ரா. இவங்க அவ்வளவு பர்ஃபெக்டா பாடுவாங்க.

மெஷினுக்குள் வாய்ஸைக் கொடுத்தால் பாட்டாக மாறிவிடும். ஆனால், சித்ரா 19 வயதில் லைவ் ரெக்கார்டிங்கில் அத்தனை பாடல்களைப் பாடியிருக்கிறார்.

கே.எஸ்.சித்ரா விருது
கே.எஸ்.சித்ரா விருது

ஒரே நாளில் 4-8 பாடல்களை ரெக்கார்ட் செய்திருக்கிறார். எல்லா பாடல்களும் அவ்வளவு மெச்சத்தக்கதாக இருக்கும். நிறைய ரியாலிட்டி ஷோக்களுக்குச் செல்கிறோம். சித்ரா பாடியதில் 80% யாராவது பாடினாலே நாங்கள் எழுந்து நின்று பாடிவிடுவோம்.

`ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்...’, `கண்ணாளனே...’ போன்ற பாடல்களில் சித்ரா அசாத்தியமாகப் பாடியிருப்பார். அவர் அப்படிப் பாடிய நூறு பாடல்களை என்னால் சொல்ல முடியும்’’ என்றார்.

Vikatan - Aval Awards Sponsors
Vikatan - Aval Awards Sponsors

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User