"அப்போது மமிதா பைஜூ என் கைகளைப் பிடித்துக்கொண்டு எனக்கு தைரியத்தை கொடுத்தார்!" - அனஸ்வரா ராஜன்
நடிகை அனஸ்வர ராஜன் தற்போது தெலுங்கில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்திருக்கும் 'இட்லு அர்ஜுனா' என்ற திரைப்படம், அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

'சூப்பர் சரண்யா', 'பிரணய விலாசம்' ஆகிய திரைப்படங்களில் மமிதா பைஜுவும் அனஸ்வர ராஜனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
மமிதா பைஜுவுடனான நட்பு குறித்து, சமீபத்தில் 'இட்லு அர்ஜுனா' படத்தின் புரொமோஷனுக்குக் கொடுத்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.
அனஸ்வர ராஜன் பேசுகையில், "எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பல தருணங்களில், மமிதா என் பக்கத்திலேயே இருந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு எனக்கு மிகப்பெரிய தைரியத்தையும் ஆதரவையும் கொடுத்தார்.
அவர் கொடுக்கும் அந்த நம்பிக்கையும் ஆறுதலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு நல்ல மனிதராகவும், சிறந்த நடிகையாகவும் மமிதாவை நான் எப்போதும் வியந்து பார்க்கிறேன்.

எங்கள் நட்பு வெறும் சினிமா வேலைகளோடு முடிந்துவிடுவதில்லை; அது உண்மையான அன்பிலும் அக்கறையிலும் கட்டமைக்கப்பட்டது" என்றவர், "தொடக்க காலத்தில் மற்ற நடிகைகளோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டவை என் மனதைப் பாதித்திருக்கலாம்.
ஆனால், இப்போது இதுபோன்ற ஒப்பீடுகளை நான் ஒரு போட்டியாகப் பார்ப்பதில்லை; இவை எதுவுமே என்னை இப்போது பாதிப்பதும் இல்லை" எனப் பேசியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)