Jailer 2: ஷீலா கதாபாத்திரத்தை படத்தில் உருவக்கேலி செய்தார்களா? - விளக்குகிறார் நேன்சி திவ்யா
நேன்சி திவ்யா விக்ரம் என்பவர் ஸ்னாஸி தமிழச்சி (Snazyy Tamilachi) என்னும் சமூக இணையதளப் பக்கத்தின் மூலம் உருதோற்றதிற்கான நேர்மறை சிந்தனையையும், உருவ கேலிக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் திரையில் வெளியான ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தில், நேன்சி திவ்யா சிறு கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அந்தக் காட்சியானது அவரையே உருவகேலி செய்யும் விதமாக அமைந்ததாக பார்வையாளர்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.
விமர்சனம் குறித்து விரிவான தகவல்களை அறிய நேன்சி திவ்யாவிடம் தொடர்புக் கொண்டு பேசியபோது, "இந்தப் படத்தில் எனக்கு கொடுத்த ஷீலா கதாபாத்திரம் கலகலப்பான ஓர் உணவு பிரியர். இந்தக் கதபாத்திரத்தை நீங்க உருவகேலி செய்றதா பாக்குறீங்க. நான் அதை அந்தக் கதாபாத்திரமா பாக்குறேன். இதுவே நான் நடிக்காமா ஒல்லியாக இருக்குற வேற ஒருத்தவங்க இதே கதாப்பாத்திரத்தில் நடிச்சி இருந்தாலும் ஒரே காட்சிதான் இருக்கும் .

ஜெயிலர் 2 படத்தில் வர என்னோட முதல் சீன்'ல இங்க வந்து உட்காருங்கன்னுதான் ரஜினி சார் சொல்லி இருப்பாங்க. 'நீங்க நல்லா குண்டா இருக்கீங்க அப்பதான் வெயிட் தாங்கும் இங்க வந்து உட்காருங்கன்'னு உருவக்கேலி பண்ற மாதிரி சொல்லலையே. யாரு வேணாலும் அந்தக் கூடை மேல உட்கார்ந்து பார்த்துக்கலாம். நான் அந்தக் கதாபாத்திரத்துல நடிக்கிறதுனால பாக்குறவங்களுக்கு உருவகேலி செய்ற மாதிரி தோன்றி இருக்கலாம்.
சூப்பர் ஸ்டார வயசானவருன்னு டம்மி பண்ணி பேசுறது, கடைக்கு லேட்டா வரீங்க சம்பளத்தை கட் பண்ணிடுவேன்னு சொல்றது, சூப்பர் ஸ்டார நான் ஒரு டைம் திட்டுறது, அவரு ஒரு டைம் என்னை வம்பு இழுக்கிறது மாதிரியான சீன்லான் இருந்துச்சி. ஆனால், அத எல்லாம் கட் பண்ணிட்டாங்க. மொத்தமா எல்லா சீனையும் பாத்து இருந்தா இப்படி உருவக்கேலி பண்ற மாதிரி எல்லாம் தோன்றி இருக்காது.
குண்டா இருக்குறவங்க எந்த டிரஸ் வேணாலும் போடலாம். குண்டா இருக்குறத்துக்து சாப்பாடு காரணம் கிடையாது. நிறைய காரணம் இருக்குன்னுலாம் நான் ஆணித்தனமா எல்லா இடத்துலையும் சொல்லிட்டு வரேன்.
இந்தக் கேரக்டர நான் பண்ணுனதுனால எல்லாருக்கும் அப்படி தோன்றி இருக்கலாம். இதுவே ஒல்லியா இருக்குறவங்க பண்ணி இருந்த யாருக்கும் இப்படி தோன்றி இருக்காது. நம்ம நாட்டுல மட்டும்தான் குண்டா இருக்குறவங்க டிரஸ் போட்டா ஒரு மாதிரி பாக்குறது, ஒல்லியா இருக்குறவங்க டிரஸ் போட்டா ஒரு மாதிரி பாக்குறது உருவக்கேலி பண்றது எல்லாமும் இருக்கு.
ஆனால், நம்ம சிஸ்டமே குண்டா இருக்குறவங்கள கிண்டல் பண்ணும்போது ரசிக்கிற விதமாகத்தான் இருக்கு. ரசிக்க ஆளு இருக்குற வரையும் கிண்டல் பண்றவங்கள எதுவும் பண்ண முடியாது. அப்ப முதல்ல நம்மதான் மாறணும். எதை விரும்பணும் எதை விருப்பக் கூடாது, எதைக் காமெடியாக எடுத்துக்கணும் எதைக் காமெடியாக எடுத்துக்கூடாதுன்னு.

அப்ப நம்ம மேல தப்ப வச்சிகிட்டு மத்தவங்கள சொல்லி எந்தப் புரோஜனமும் இல்லை. நம்ம மாறுனா தானா எல்லாம் மாறிடும். வளரும் குழந்தைகளுக்கு யாரை எப்படி பார்க்கணும், உருவக்கேலி பண்ணக்கூடாதுன்னு சொல்லி புரிய வைக்கணும்.
அப்படியே எல்லோரும் விமர்சிக்கிற மாதிரி நான் நடிச்சது உருவக்கேலி செய்யப்படுற விதமான கதாபாத்திரமா இருந்தாலும், சினிமாத்துறையில நானும் வளர்ந்துவர ஒரு பொண்ணுதான். நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி நான் ஒரு நல்லா ரோல்ல நடிக்கணுன்னா, சினிமாத்துறையில ஒரு நல்ல இடத்தை முதல்ல புடிக்கணும்.
அதுக்கு அப்பறம்தான் என்னால நல்ல கேரக்டர் ரோல்லாம் பண்ணவே முடியும். கண்டிப்பா சினிமாத்துரையில எனக்குன்னு ஒரு தனி இடத்தை உருவாக்கி, சீக்கிரமே நல்ல நல்ல கேரக்டர்ல நடிச்சு குண்டா இருக்குறவங்க நல்ல கேரக்டரும் பண்ண முடியும்னு நிரூபிப்பேன்'' என்ற பேசினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)