நிலச்சரிவில் பறிபோன குடும்பம்; விபத்தில் பலியான காதலன்... வயநாடு ஸ்ருதிக்கு புதுவாழ்வு!

Nov 08, 2026 - 13:00
0
நிலச்சரிவில் பறிபோன குடும்பம்; விபத்தில் பலியான காதலன்... வயநாடு ஸ்ருதிக்கு புதுவாழ்வு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் வெள்ளார்மலை அரசு பள்ளி அருகே வசித்துவந்த சிவண்ணனின் 9 பேர் கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் ஸ்ருதியைத் தவிர மற்ற அனைவரும் மண்ணில் புதைந்து இறந்தனர். சிவண்ணன், அவரது மனைவி சபிதா, தந்தை போமலப்பன், தாய் சாவித்திரி, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா(19) ஆகியோர் இறந்த நிலையில் கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் தங்கி பணிபுரிந்து வந்த ஸ்ருதி மட்டும் அந்த விபத்தில் சிக்காமல் உயிர்பிழைத்தார். ஸ்ருதிக்கு கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடத்துவதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் மொத்த குடும்பத்தையும் இழந்து தனிமரமாக நின்றார். அப்போது, ஸ்ருதிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தார், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட காதலன் ஜென்சன். இதற்கிடையே ஜென்சனும், ஸ்ருதியும் காரில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் தனியார் பேருந்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஜென்சன் மரணமடைந்தார். ஸ்ருதி காயத்துடன் தப்பினார். இதற்கிடையே கடந்த பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஸ்ருதிக்கு வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் (கிளார்க்) பணியும், வீடும் வழங்கி உதவியது. இந்த நிலையில் சக ஊழியரான சந்தீப் என்பவரை குருவாயூர் கோயிலில் வைத்து நேற்று திருமணம் செய்துகொண்டார் ஸ்ருதி. முன்னாள் அமைச்சர் கே. ராஜன் எம்.எல்.ஏ ஸ்ருதியின் பெற்றோரின் ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.

ஸ்ருதியின் குடும்பம் (நடுவில் அமர்ந்திருப்பவர் ஸ்ருதி)

திருமணத்துக்குப்பின் ஸ்ருதி கூறுகையில், "எனது பின்னணி மற்றும் சூழ்நிலைகள் அனைத்தையும் முழுமையாகப் புரிந்துகொண்டுதான் சந்தீப் என்னை கரம் பற்றியுள்ளார். எங்கள் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்பதே என் பிரார்த்தனை" என்றார்.

வயநாடு ஸ்ருதி திருமணம்

திருமணத்தை நடத்திவைத்த கே.ராஜன் எம்.எல்.ஏ கூறுகையில், "சொந்தத் தங்கையின் திருமணத்தை நடத்தி வைப்பது போன்ற மகிழ்ச்சியும் உற்சாகமும் எனக்கு இருந்தது. துயரங்கள் சூழ்ந்த நாள் முதல் இன்று வரை ஸ்ருதிக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறோம். அது இனிவரும் காலங்களிலும் தொடரும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User