உங்க ரூ.500, ரூ.1,000 கோடிகளாக மாற வேண்டுமா? உடனே ஃபாலோ செய்ய வேண்டிய சேமிப்பு, முதலீடு ட்ரிக்ஸ்!

Nov 08, 2026 - 13:00
0
உங்க ரூ.500, ரூ.1,000 கோடிகளாக மாற வேண்டுமா? உடனே ஃபாலோ செய்ய வேண்டிய சேமிப்பு, முதலீடு ட்ரிக்ஸ்!

மிக மிகப் பரபரப்பாக மாறிவிட்டது இந்த உலகம். எல்லோரும் எங்கேயோ கால்களில் சக்கரம் கட்டி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

அப்படி எங்குதான் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று சற்று நிதானித்துப் பார்த்தால், வருமானத்திற்காகவும், வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தை அடைவதற்கும்தான் இத்தனை பரபரப்பும் ஓட்டமும்.

வருமானம், வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் இரண்டுமே ஒரு வகையில் பணத்துடன் சம்பந்தப்பட்டதுதான். இப்போது நமக்கு வரும் வருமானத்தில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற கனவைக் காண முடியுமா என்பது தெரியவில்லை.

ஆனால், அடுத்தடுத்த கட்டங்களை நிதி நெருக்கடி இல்லாமல் நகர்த்த சின்னச் சின்ன டிப்ஸ்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

money
சம்பளம் - பணம்

> உங்கள் வருமானம்/சம்பளத் தேதியா இன்று?

கையில் சம்பளமோ, வருமானமோ வந்தவுடன் சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் பணத்தை ஒதுக்கி வைத்துவிடுங்கள். ஆனால், இதற்கு மாறாக, நாம் அனைவரும் கையில் பணம் வந்தவுடன் செலவுகளையே பார்க்கிறோம். இது தவறான அணுகுமுறை.

செலவு இல்லாத நாட்களே நம்முடைய காலண்டரில் இல்லை. நமக்குச் சம்பள உயர்வு கிடைத்தாலும் சரி... திடீரென்று அதிகப் பணம் கிடைத்தாலும் சரி... அதுவும் எப்படியாக இருந்தாலும் செலவிற்குச் சரியாக இருக்கும்.

அதனால், செலவுக்குப் பின் சேமிக்கலாம் என்றில்லாமல், சேமிப்பு அல்லது முதலீட்டை முதல் செலவாக மாற்றுங்கள். உங்களுடைய வருமானத்தில் 10 சதவீதத்தை முதலீடு அல்லது சேமிப்பிற்கு ஒதுக்கினால் சூப்பர்.

ஆனால், அது மிகப்பெரிய தொகை என்று நீங்கள் நினைத்தால், பிரச்னையே இல்லை. உங்களால் முடிந்தால் ரூ.1,000-ஐயும் கூட முதலீட்டிற்கும், சேமிப்பிற்கும் எடுத்து வையுங்கள். ரூ.500 கூடப் போதும்!

சேமிப்பு, சேமிப்புக் கணக்கு, ஆர்.டி. இவற்றைத் தாண்டி மாதம் மாதம் குறைந்தபட்சம் ரூ.500-ஐயாவது எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்து வாருங்கள். இது ஏதேனும் ஒரு சமயத்தில் உங்களுக்குக் கைகொடுக்கும்.

இதைத் தாண்டி, உங்களுக்கு என்ன இலக்கு இருந்தாலும், அதற்கேற்ப பிளான் செய்து முதலீடு செய்யத் தொடங்குங்கள். முதலீடு செய்வதெல்லாம் ஓகே. ஆனால், ஏதேனும் அவசரத் தேவை என்று அந்தத் தொகையை இடையில் எடுத்துவிடக்கூடாது.

எஸ்.ஐ.பி
எஸ்.ஐ.பி

நீங்கள் எந்த இலக்கிற்காக முதலீடு செய்கிறீர்களோ, அந்த இலக்கிற்காக மட்டுமே குறிப்பிட்ட முதலீட்டை எடுக்க வேண்டும்.

எஸ்.ஐ.பி. போடுங்கள் என்று கூறுவது உங்களை ஒருவித கமிட்மெண்டிற்கு உட்படுத்தவே. கமிட்மென்ட் இல்லையென்றால் நாம் இஷ்டத்திற்குச் செலவு செய்யக்கூடும்.

இதற்குச் செக் வைக்கும் விதமாக, எஸ்.ஐ.பியைத் தொடங்கினால், அதற்குக் காசு கொடுக்க வேண்டுமே என்பதற்காகவே நம்முடைய தேவையில்லாத செலவுகளைக் குறைப்போம்.

இன்னொரு பக்கம், நமக்குப் பணமும் சேர்ந்து வரும். நிதி சம்பந்தமான கமிட்மெண்டுகள் உங்களுக்கு நிதி ஒழுக்கத்தைக் கொண்டுவரும். இஷ்டத்திற்குச் செலவு செய்வதைக் குறைக்க வேண்டுமா?

> ஒவ்வொரு மாதமும் உங்களுடைய செலவுகளுக்குப் பட்ஜெட் போடுங்கள்.

இதற்கு இவ்வளவு தொகை என்று தனியாக எடுத்து வையுங்கள். அந்தத் தொகைக்குள்ளேயே உங்களுடைய குறிப்பிட்ட செலவை முடிக்கப் பாருங்கள்.

அந்தத் தொகையைத் தாண்டினால், எதற்கு எக்ஸ்ட்ரா தொகை தேவைப்படுகிறது, அது தேவையா என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

பட்ஜெட்டிற்குள்ளேயே செலவு செய்யும்போது, தேவையில்லாத செலவுகள், கடன் வாங்குவது குறையலாம். இன்றைய லைஃப்ஸ்டைல் மாற்றத்திற்கு ஏற்ப, என்டர்டெயின்மென்ட் பட்ஜெட், அவுட்டிங் பட்ஜெட்டையும் பட்ஜெட்டில் சேர்த்துவிடுங்கள். இதுதான் இப்போது நம்முடைய வருமானத்தை அதிகம் பதம்பார்க்கிறது.

குடும்ப பட்ஜெட்
குடும்ப பட்ஜெட்

இதனால், இதற்கெனத் தனிப் பட்ஜெட் போட்டுவிட்டால், அதற்குள் செலவழித்து பட்ஜெட்டில் துண்டு விழுவதைத் தவிர்த்துவிடலாம். பட்ஜெட்டை ஒவ்வொரு மாதத்தின் வருமானத்தின் அடிப்படையில் மட்டுமே போட வேண்டும்.

சென்ற மாதம் கொஞ்சம் வருமானம் மீதி இருக்கிறது என்று, அதற்கும் சேர்த்துப் பட்ஜெட் போடக்கூடாது. அந்த மீதித் தொகையைச் சேமிப்பிற்கென்று எடுத்து வைத்துவிடுங்கள்.

ஒருவேளை, அந்தத் தொகையையும் பட்ஜெட் போடுவதற்குச் சேர்த்தால், ஒவ்வொரு மாதமும் அந்தத் தொகை எக்ஸ்ட்ராவாகக் கிடைத்துக்கொண்டிருக்காது. இந்தத் தொகை எதிர்பார்ப்பாக மாறினால், மீண்டும் நிதிச் சிக்கல்தான் உருவாகும்.

> ஷாப்பிங்கில் அதிகப் பணம் செலவாகக் கூடாதா?

இன்று சில க்ளிக்குகளிலேயே ஆர்டர் போட்டு, பொருள்களை வாங்கிவிடுவதால், ஆர்டர்களை அடுக்கிக்கொண்டே போகிறோம். இதற்கு நிச்சயம் கடிவாளம் போட்டே ஆக வேண்டும்.

ஒரு பொருளை வாங்க விரும்புகிறீர்களா? அத்தியாவசியம் என்றால் உடனே வாங்கிவிடுங்கள். தேவை என்றால், ‘கார்ட்’டில் போட்டுவிட்டு, சில வாரங்களோ, இரண்டு மூன்று மாதங்களோ வெயிட் செய்யுங்கள்.

இந்த வெயிட்டிங் காலத்திற்குப் பிறகும், அந்தப் பொருள் தேவை என்று தோன்றினால் வாங்குங்கள். இல்லையென்றால், அதை அப்படியே கார்ட்டில் இருந்து டெலீட் செய்துவிடுங்கள். இதுவே உங்களுடைய காசைக் கணிசமாகச் சேமிக்கும்.

இதற்கு ஆங்கிலத்தில், ‘Delayed Gratification’ என்று பெயர்.

ஷாப்பிங்
ஷாப்பிங்

ஷாப்பிங்கில் எல்லாரும் பிராண்டட் பொருள்களை வாங்க நினைக்கிறோம். அது சரிதான். ஆனால், டாப் பிராண்டை மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். இரண்டாவது, மூன்றாவது டாப் பிராண்டுகளிலிருந்தும் கூடக் குறிப்பிட்ட பொருளை வாங்குங்கள்.

அதிலேயே உங்களுக்குத் தேவையான ஸ்பெசிபிகேஷன் கிடைத்துவிடும். டாப் பிராண்டில் வாங்காமல் அடுத்தடுத்த பிராண்டில் வாங்குவதால் செலவு கொஞ்சம் குறையும்.

இன்று சோஷியல் மீடியாக்களில் வரும் போஸ்டுகள், ரீல்ஸ்கள்தான் நம்முடைய லைஃப்ஸ்டைலை முடிவு செய்கின்றன. அதைப் பார்த்துத்தான் நாம் ஒவ்வொன்றையும் முடிவு செய்து வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சோஷியல் மீடியாவில் பார்க்கும் ஒருவரின் வாழ்க்கையும், உங்களது வாழ்க்கையும் முற்றிலும் வேறு. அதனால், அவருடன் உங்களை நீங்கள் ஒப்பிடுவதைத் தவிருங்கள். (பள்ளிக்காலத்திலேயே, ‘அவன் மார்க்கோடு என் மார்க்கை ஒப்பிடாதீங்க’ என்று கோபப்பட்டவர்கள் நாம் என்பதை மறந்துவிடாதீர்கள்)

> அந்தக் கால ட்ரிக்கை மறந்துவிடாதீர்கள்!

நம் அப்பாக்கள் ஒரு கணக்குப் புத்தகத்தை வைத்து, அதில் எல்லாச் செலவுகளையும், கணக்கு வழக்குகளையும் எழுதி வைப்பார்கள். அதைத்தான் நாம் மீண்டும் பின்பற்ற வேண்டும்.

கணக்கு எழுதுதல்
கணக்கு எழுதுதல்

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவுகளையும் அன்றாடம் ஒரு நோட்டிலோ, எக்ஸல் ஷீட்டிலோ நோட் செய்து வையுங்கள். நீங்கள் ஒவ்வொரு செலவையும் இப்படி நோட் செய்யும்போது, நீங்கள் தேவையில்லாத செலவைச் செய்திருந்தால், அது உங்களுக்கு உடனே தெரியும். அதை நீங்கள் திரும்பவும் செய்யாமல் தடுக்கலாம்.

இந்த ட்ரிக்ஸையெல்லாம் செய்தால், கோடீஸ்வரர் ஆகிவிட முடியாது. ஆனால், இதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், நிச்சயம் கோடீஸ்வரர் ஆவதற்கு இது சின்னப் பங்காக இருக்கும். இந்த ட்ரிக்ஸ் மூலம் நீங்கள் சேமிக்கும் ரூ.10, ரூ.500 ஒரு காலத்தில் கோடியாகக் கூட மாறலாம்.

சிறு துளி பெருவெள்ளம்... மறந்துவிடாதீர்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User