Doctor Vikatan: மனசு சரியில்லையா.... அப்போ இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடாதீங்க!

Oct 31, 2026 - 07:00
0
Doctor Vikatan: மனசு சரியில்லையா.... அப்போ இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடாதீங்க!

Doctor Vikatan: சாப்பிடும் உணவுகளுக்கும் மனநிலைக்கும் தொடர்பு உண்டா... மூட் லிஃப்ட்டிங் உணவுகள், ஸ்ட்ரெஸ்ஸாக்கும் உணவுகள் என ஏதேனும் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

நம் மனநிலைக்கும் நாம் சாப்பிடும் உணவுகளுக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. சில வகையான உணவுகளைச் சாப்பிடும்போது மனம் அமைதியாவதையும், சில உணவுகளைச் சாப்பிடும்போது ஸ்ட்ரெஸ்ஸாக உணர்வதையும் பலரும் அனுபவித்திருக்கலாம்.

சாத்விக உணவு தரும் அமைதி: சாத்விகமான உணவுகளைச் சாப்பிட்டால் மனம் ரிலாக்ஸ்டாக (Relaxed) இருக்கும்.

எவையெல்லாம் சாத்விக உணவுகள்?

 பெரும்பாலும் சைவம் (Vegetarian), அதிக காரம், மசாலா (Spices) இல்லாத உணவுகள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றைச் சாப்பிட்டால் மனநிலை (Mood) நன்றாக இருக்கும்.

அதிக கார மற்றும் அசைவ உணவுகள்:
 

அதிக மசாலா, அதிக எண்ணெய் (Oily) மற்றும் அசைவ (Non-vegetarian) உணவுகளைச் சாப்பிட்டால் அவற்றைச் செரிப்பது கொஞ்சம் கடினமாக  இருக்கும், அதாவது மனநிலையைக் கொஞ்சம் ஸ்ட்ராங் (Strong) ஆக மாற்றும்.

சாக்லேட்கள் (Chocolates), ஐஸ்கிரீம்கள் (Ice creams) போன்றவை மனநிலையைக் கொஞ்சம் உயர்த்த உதவும்.

மனநிலையை உயர்த்தும் உணவுகள் (Mood lifting foods):

சர்க்கரை அதிகமாக இருக்கும் சாக்லேட்கள் (Chocolates), ஐஸ்கிரீம்கள் (Ice creams) போன்றவை மனநிலையைக் கொஞ்சம் உயர்த்த உதவும். 

மன அழுத்தத்தை (Stress) உண்டாக்கும் உணவுகள்:
செரிமானம் ஆகக் கடினமான உணவுகள்,  கண்டிப்பாக மன அழுத்தத்தை (Stress) ஏற்படுத்தும். எனவே, அவற்றை எப்போதுமே தவிர்ப்பது சிறந்தது.

உணவு என்பதே பெரிய மகிழ்ச்சிதானே! நாம் அனைவருமே உணவு மூலமாகத்தான் பெரும்பாலான விஷயங்களை வெளிப்படுத்துகிறோம். அந்த வகையில் பார்த்தாலும் உணவுக்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

டயட்டீஷியன் அம்பிகா சேகர்:

உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகராக 30 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் ஆக்ஸிமெட் மருத்துவமனையில் டயட்டீஷியனாகப் பணிபுரிகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User