ராஜஸ்ரீ: உயிருக்குப் போராடும் பாரதிராஜா பட நாயகி... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
இயக்குநர் பாரதிராஜாவின் 'கருத்தம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஜஸ்ரீ. முதல் படப் பெயரே அவரது அடையாளமாகவும் மாறிப்போனது. 'கருத்தம்மா' ராஜஸ்ரீயாக தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தவருக்கு, இயக்குநர் பாலாவின் 'சேது' மற்றும் 'நந்தா' படங்கள் பெயர் சொல்ல வைத்தன.
முன்னணி இயக்குநர்கள், முக்கியப் படங்களில் நடித்தும், தமிழ்த் திரையுலகில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. பிறகு சின்னத்திரைக்கு இடம்பெயர்ந்தார். 'கங்கா, யமுனா, சரஸ்வதி', 'ஆலயம்', 'அகல் விளக்கு', 'மந்திர வாசல்', 'சிவமயம்' என வரிசையாக சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தார்.
இடைப்பட்ட காலத்தில் கல்யாணம், அதையடுத்த மணமுறிவு, மறுமணம், குழந்தைப் பிறப்பு என இவரது தனிப்பட்ட வாழ்வில் நல்லதும் கெட்டதுமாக நிறைய நிகழ்வுகள்... பல காலமாக நடிப்பிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில், 49 வயதாகும் ராஜஸ்ரீக்கு, திடீர் உடலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் சொல்கின்றன.
சிறுநீரகச் செயலிழப்பு (கிட்னி ஃபெயிலியர்) காரணமாக, படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நடிகை ராஜஸ்ரீ. அவர் மீண்டு வர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் காத்திருக்கிறார்கள் நண்பர்களும் உறவினர்களும்.
மீண்டு வரட்டும்... மீண்டும் வரட்டும்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)