Bigg Boss 10 : 'ஊரை காலி பண்ணிட்டு போயிடுங்க'னு மிரட்டுறாங்க! - அவினாஷ், அக்ஷ்தாவின் அம்மா ஷோபனா

Nov 07, 2026 - 17:00
0
Bigg Boss 10 : 'ஊரை காலி பண்ணிட்டு போயிடுங்க'னு மிரட்டுறாங்க! - அவினாஷ், அக்ஷ்தாவின் அம்மா ஷோபனா

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 பாதி நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

வழக்கமான வார இறுதி எவிக்ஷனில் வெளியேறிய போட்டியாளர்கள் போக, தற்போது அந்த வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவருமே டைட்டிலை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

போட்டியாளர்களுக்கு ஆதரவாக வெளியில் இருந்து அவரவர் ரசிகர்களும் பந்தயம் கட்டாத குறையாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் அண்ணன் தங்கையாகக் கலந்து கொண்டிருக்கும் அவினாஷ், அக்ஷிதா ஆகியோரின் அம்மா ஷோபனாவிடம் பேசினோம்.

avinash family

''பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்ல்ல வர்றதுக்கு முன்னாடியே நான் அந்த நிகழிச்சியின் ரசிகை. அந்த நிகழ்ச்சியை ஏன் பிடிக்கும்னா, லைஃப்க்குத் தேவையான நல்ல பாடத்தை, அனுபவத்தைத் தருகிற நிகழ்ச்சி அது. நான் இந்தி பிக்பாஸ் பார்த்திட்டிருந்தப்பெல்லாம் அவினாஷ், அக்ஷிதா ரென்டு பேரும் ரொம்ப சின்ன பசங்க. அதனால அவங்களைப் பார்க்க அனுமதிக்க மாட்டேன்.

காரணம், படிப்பு டிஸ்டர்ப் ஆகுமேனுதான். ஆனா அப்ப நினைச்சுக் கூடப் பார்க்கல, ஒரு காலத்துல என் ரெண்டு பசங்களூம் அதே நிகழ்ச்சியில கலந்துப்பாங்கனு.

ரெண்டு பேருக்கும் வாய்ப்பு கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். காரணம், முன்னவே சொன்னேனே, நல்ல வாழ்க்கை அனுபவம் கிடைக்குதுங்கிறதாலதான். சொசைட்டியை எதிர்கொள்ளத் தேவையான பாடம் அந்த ஷோ மூலம் கிடைக்குது.

ஆனா இங்க பெரும்பாலானவங்க இந்தக் கண்ணோட்டத்துல நிகழ்ச்சியைப் பார்க்கல. 'பிக்பாஸ் போனா சினிமா வாய்ப்பு வரும்'னு நினைச்சுதான் போறாங்க.

என் எண்ணம் இதுதாங்கிறதால என் பசங்கள்ல யாராவது ஒருத்தர் டைட்டில் அடிச்சா சந்தோஷப் படுவேன். ஆனா டைட்டில் வாங்கியே ஆகணும்கிற வெறியில் கேம் ஆடச் சொல்லி நான் அவங்களை அனுப்பலை. 106 நாட்களும் அங்க இருந்துட்டு வந்தாலே என‌க்கு அது போதும்.

TTF Vasan

இதை என்னோட கருத்தா மட்டும் சொல்லல. என் பசங்களுமே இதே மனநிலையிலதான் இருக்காங்க. ஏன்ன்னா அடிப்படையில எங்களோடது ஸ்போர்ட்ஸ் குடும்பம். அதனால சிக்ஷுவேஷனை எதிர்கொள்கிற மனப்பக்குவம் இருக்கு.

மத்த போட்டியாளர்களையும் எங்களை மாதிரியே இருக்கணும்னு சொல்ல மாட்டேன். ஆனா மத்த போட்டியாளர்கள் சிலர் குறிப்பா வாசன் தம்பியின் ரசிகர்கள் குறித்து இங்க ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய வேண்டியிருக்கு.

கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு. ஆனா நான் எதிர்கொள்கிற பிரச்னைங்கிறதால சொல்ல வேண்டி வருது.

அந்த தம்பியை நான் இதுவரை பார்த்தது கூட கிடையாது. பிக்பாஸ்ல அவர் வர்ற வரைக்கும் அவர் பத்தி எனக்குத் தெரியவும் செய்யாது.

அவர், என் பையன், பொண்ணு எல்லாருமே ஒரு நிகழ்ச்சிக்காக ஒரே இடத்துல இருக்காங்க. அந்த வீட்டுல அவங்களுக்கிடையில் ஏதாவது பிரச்னை வந்தா அவங்களே அடுத்த நாளே சரி செஞ்சிடப் போறாங்க. ஒரு கேம் ஷோவுக்குதானே போயிருக்காங்க. அப்படிதானே எடுக்கணும்.

ஆனா வாசனுக்கு ஆதரவு தெரிவிக்கறோம்கிற பெயர்ல என்னுடைய மகளுடைய சமூக ஊடகப் பக்கத்துல வந்து அசிங்கமா கமென்ட் பண்றது. அதுல இருந்து என் செல் நம்பரை எடுத்துகிட்டு வாட்ஸ் அப்ல வந்து அசிங்க அசிஙகமா பேசறதுன்னு எல்லை மீறிப் போயிட்டிருக்காங்க.

avinash family

இதை ஒரு பிரச்னையா எடுத்துட்டுப் போலீசுக்குப் போவதானு யோசிச்சேன். ஆனா ரொம்ப தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தறாங்க.

உச்சமா 'உன் பையனும் பொண்ணும் சீக்கிரமே வெளியில வந்துடுவாங்க, வந்ததும், ஊரைக் காலி செய்துட்டு குடும்பத்தோட எங்கயாச்சும் போயிடுங்க, இல்லாட்டி சிக்கலாகிடும்'னு மிரட்டல்லாம் செஞ்சாங்க.

ரெண்டு மூணு நாளா இதனால மன உளைச்சலா இருக்கு. அக்ஷிதாவுக்கு சப்போர்ட் செய்த அவருடைய நண்பர்கள் சிலருக்கும் கூட இதே டார்ச்சரைத் தந்திருக்காங்க.

இதனால அவருக்குமே கெட்ட பேர் தானே. அவருக்கு ஆதரவு கேளூங்க. ஆனா மத்தவங்ககிட்ட ஏன் வம்புக்கு வர்றீங்க?

நான் ஏதோ என் பசங்களுக்கு சப்போர்ட் கிடைக்கும்கிறதுக்காக இதைப் பேசலை. நான் சந்திச்ச சிரமங்களுக்கெல்லாம் எவிடென்ஸ் இருக்கு.

அதனால உள்ள இருக்கிற ஒவ்வொரு போட்டியாளருக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லிகிடுறேன். அவங்களுடைய ஆதரவாளர்களுக்கு நான் கேட்டுக்கறதெல்லாம் மத்தவங்களைக் காயப்ப்படுத்தாம உங்க அபிமான போட்டியாளர்களூக்கு ஆதரவு திரட்டுங்கங்கிறதுதன்' என முடிக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User