சின்னசேலத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி! அம்பேத்கர் சிலைக்கு விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை! திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் முழக்கம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில், இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சின்னசேலம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு விசிக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை வாசித்து, அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் அடிப்படைக் கொள்கைகளான சமூகநீதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தையும் பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
“உங்கள் தலைவர் சாவர்க்கர்; எங்கள் தலைவர் அம்பேத்கர்!” என்ற முழக்கத்தையும் நிகழ்வில் பங்கேற்ற நிர்வாகிகள் எழுப்பினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்வைத்து, “தீபத்தை ஏற்றுவதா? கலவரத் தீயை ஏற்றுவதா?” என்ற கேள்வியுடன் முழக்கமிட்டனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நகரச் செயலாளர்கள் குமார், பாஸ்கர், ஒன்றியச் செயலாளர் ஆண்டவர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் முகாம் நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாக்கத் தொடர்ந்து செயல்படுவோம் என நிர்வாகிகள் உறுதியேற்றனர்.
செய்திகளுக்காக: மாதேஸ்வரன்
மாநில துணைச் செயலாளர் – காட்சி ஊடகம்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)