LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

Apr 27, 2026 - 12:01
 0
LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் (ஏப்ரல் 26) லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது.

இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட விறுவிறுப்பான சூப்பர் ஓவரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ரிங்கு சிங்
ரிங்கு சிங்

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

விருது வென்ற பிறகு பேசிய ரிங்கு சிங், " நான் பேட்டிங் செய்யச் செல்லும்போது அணி ஏற்கனவே 3-4 விக்கெட்டுகளை இழந்திருந்தால், ஆட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்தி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பதில் தான் என் கவனம் இருக்கும்.

சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் ஓடி ஸ்ட்ரைக்கை எப்படி மாற்றுவது, எங்கே பவுண்டரிகளை அடிக்கலாம் என்பதைப் பற்றி யோசிப்பேன்.

ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எப்போதும் எனது முக்கிய குறிக்கோளாக இருக்கும்.

கடைசி ஓவர்களுக்காக சில ஷாட்டுகளைச் சேர்த்து வைக்க வேண்டும் என்பது போன்ற எந்த நிலையான திட்டமும் என்னிடம் இல்லை. அந்தந்த சூழலுக்கு ஏற்பவே நான் செயல்படுவேன்.

பிறகு ஒரு ஸ்பின்னர் பந்து வீசுவதை உணர்ந்து, அதற்கேற்ப எனது ஆட்டத்தை மாற்றிக்கொள்வேன்.

ரிங்கு சிங்
ரிங்கு சிங்

சிறுவயதிலிருந்தே எனக்கு ஃபீல்டிங் செய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். நான் உடற்தகுதியுடன் இருப்பதால், என்னால் வேகமாக ஓடி மைதானத்தை நன்றாக கவர் செய்ய முடிகிறது. நான் ஃபீல்டிங்கை மிகவும் ரசித்து செய்கிறேன்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து சூப்பர் ஓவர் கேட்சிற்குத் தயாராக இருந்தீர்களா? என்ற கேள்விக்கு, " உண்மையைச் சொல்லப்போனால், அந்த கேட்சிற்கு நான் தயாராக இருக்கவில்லை. பந்து வேறு எங்கையாவது செல்லும் என்று தான் நினைத்தேன், ஆனால் திடீரென்று அது என்னை நோக்கி வந்தது, நான் எப்படியோ அதைப் பிடித்துவிட்டேன்" என்று பதிலளித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0