''அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்; கண்டுபிடிங்க" - சரண்

Apr 25, 2026 - 12:30
 0
''அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்; கண்டுபிடிங்க" - சரண்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’.

நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில்நுட்பத்தில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது.

அமர்க்களம்
அமர்க்களம்

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் சரண் அஜித், ஷாலினியின் காதல் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், " அஜித், ஷாலினி லவ் பண்ண விஷயம் எனக்குத் தான் முதலில் தெரியும். என்னிடம் தான் முதலில் சொன்னார்கள்.

முதலில் அஜித் சார் டேட் பிரச்னையால் விட்டுவிட்டுத்தான் படத்தில் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அஜித் சார் வந்து என்னிடம் சொன்னார்.

'சரண் ஜி உங்களுக்கு விட்டுவிட்டு டேட் தராமல் ஒரே ஸ்ட்ரெச்சில் தருகிறேன். சீக்கிரம் படத்தை முடித்துவிடுங்கள். இல்லையென்றால் இந்தப் பொண்ணை நான் லவ் பண்ணிவிடுவேனோ என்று எனக்கு பயமாக இருக்கிறது' என்றார்.

இயக்குநர் சரண்
இயக்குநர் சரண்

அப்போது என் அருகில் இருந்த ஷாலினியின் முகம் சிவந்து போனது. கிட்டத்தட்ட அது புரொபோசல் தான்.

இந்தப் படத்தில் முக்கியான இடத்தில் அஜித்தும், ஷாலினியும் காதலோடு பேசிக்கொண்டிருந்தப்போது அவர்களுக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்.

அதை கண்டுபிடியுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0