Doctor Vikatan: இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை... குணப்படுத்தவே முடியாதா?

Apr 21, 2026 - 09:31
 0
Doctor Vikatan: இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை... குணப்படுத்தவே முடியாதா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் எனப்படும் நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை உள்ளது. இதைக் குணப்படுத்த வாய்ப்புண்டா... எப்படிப்பட்ட சிகிச்சைகள் உதவும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

வெரிகோஸ் வெயின்ஸ் (Varicose Veins) என்பது கால்களில் உள்ள கெட்ட ரத்தக் குழாய்களின் (Veins) சுவர்கள் விரிவடைதலால் ஏற்படுகிற பிரச்னை. இது சருமத்தில் மேலோட்டமாக உள்ள ரத்தக் குழாய்களிலோ (Superficial veins) அல்லது உள்ளே ஆழமாக இருக்கும் ரத்தக் குழாய்களிலோ (Deep veins) ஏற்படலாம்.

வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு ஏற்படும்போது கால்கள் வீங்கி, எப்போதும் நீர் கோத்துக் கொண்டது போன்ற தோற்றம் இருக்கும். மேலோட்டமான ரத்தக் குழாய்களில் பாதிப்பு இருந்தால், சில நேரங்களில் சிறிய காயம் பட்டால் கூட ரத்தம் பீய்ச்சி அடித்து வெளியேற வாய்ப்புள்ளது. கால் வீக்கம் அதிகமாக இருந்தாலோ அல்லது காலில் ஏற்பட்ட புண், நீண்ட நாள்களாக ஆறாமல் இருந்தாலோ உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பாதிப்பை உறுதி செய்ய முதலில் டாப்ளர் (Doppler Study) பரிசோதனை செய்ய மருத்துவர் அறிவுறுத்துவார். அதைத் தவறாமல் கொள்வது நல்லது.
குடும்ப மருத்துவரின் பரிந்துரையின் பேரில்  வாஸ்குலர் சர்ஜன் (Vascular Surgeon) எனப்படும் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்ப்பது அவசியம். 

குடும்ப மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வாஸ்குலர் சர்ஜன் (Vascular Surgeon) எனப்படும் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்ப்பது அவசியம்.

மேலோட்டமான ரத்தக் குழாய்களில்  பாதிப்பு இருந்தால், அதைக் குறைக்க கோரகேட்டடு சாக்ஸ் (Corrugated Socks) எனப்படும் பிரத்யேக உறைகளை அணியப் பரிந்துரைப்பார்கள். ஆழமான ரத்தக் குழாய்களில்  பாதிப்பு ஏற்பட்டு அதனால் சிக்கல்கள் இருந்தால், அறுவை சிகிச்சை (Surgery) செய்ய வேண்டியிருக்கும்.  உங்கள் குடும்ப மருத்துவர் (Family Physician) ஆலோசனையின் படி, ஒரு வாஸ்குலர் சர்ஜனை அணுகுவதே சரியான வழிமுறை. எனவே, வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னையை அலட்சியமாகக் கையாள வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0