TN Assembly: பெண்களை தவறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்; மிசாவில் இல்லை!- அமைச்சர் சி.டி.ஆர் ஆவேசம்| LIVE

Sep 08, 2026 - 11:02
0
TN Assembly: பெண்களை தவறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்; மிசாவில் இல்லை!- அமைச்சர் சி.டி.ஆர் ஆவேசம்| LIVE

'கோவி.செழியன் கேள்வி!'

அமலாக்கத்துறை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதை முதல்வர் எப்படி பேசலாம்?

சர்க்காரியா கமிஷனில் யாரும் குற்றவாளி என தீர்ப்பு கொடுக்கப்படவில்லை . அதை வைத்தே திமுகவை விமர்சிக்க காரணம் என்ன?

இறந்து போன முரசொலி மாறனை பற்றி முதல்வர் ஏன் பேச வேண்டும்?

- கோவி.செழியன்

'மிசா கைது விவாதம்!'

சர்க்காரியா கமிஷனை பற்றி இந்த அவையில் எவ்வளவோ பேசப்பட்டிருக்கிறது. கலைஞர் எங்கெல்லாம் அமௌண்ட் வாங்கினார் என அந்த அறிக்கையில் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.

மிசா காலத்தில் திருட்டு, கொள்ளை, பெண்களை தவறாக பேசியவர்களையெல்லாம் கைது செய்தார்கள். அதையெல்லாம் மிசா கைது என எடுக்க முடியாது. இந்திரா காந்தியைப் பற்றி ஸ்டாலின் அவதூறாக பேசியிருந்தார். பெண்களை தவறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்கிற குறிப்புகள் இருக்கிறது.

- சி.டி.ஆர்

'அமைச்சர் ஆதவ் கொண்டு வந்த உரிமை மீறல் புகார்!'

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் விதி எண்.219-ன் கீழான உரிமை மீறல் எழுப்புவது - தொடர்பாக.

---

வணக்கம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் விதி எண்.219-ன் கீழ் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.எ.வ.வேலு அவர்கள், 2021-2026-ஆம் காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, 14.01.2026 நாளிட்ட G.O.(Ms) No.06 மூலம், 2026-27 ஆம் ஆண்டிற்கான CRIDP திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2,000 கோடி முன்னூட்டிய நிதியாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்காக 2026-27 மொத்தத் திட்ட அனுமதிக்குள் பின்னர் சரிசெய்யப்படும் என உறுதரவிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் 2026-27 மாணியக் கோரிக்கைகள் பேரவையால் வாக்களிக்கப்பட்டவோ, Appropriation Act நிறைவேற்றப்பட்டவோ இல்லை.

இருப்பினும், இப்பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, 2025-26 நிதியாண்டிலேயே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டு, எதிர்கால Budget provision மீது ரூ.2,000 கோடி committed liability உருவாக்கப்பட்டுள்ளது. இது பேரவையின் முன்னனுமதியின்றி Budget-ஐ எதிர்பார்த்து பொறுப்பு ஏற்படுத்திய "Anticipation of Budget" ஆகும்.

அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 202 முதல் 206 வரை, மாநிலத்தின் செலவினங்களைப் பரிசீலித்து மானியம் வழங்கும் அதிகாரத்தை பேரவைக்கே அளிக்கின்றன. குறிப்பாக உறுப்பு 203-ன் கீழ் மானியத்தை ஏற்க, மறுக்க அல்லது குறைக்க பேரவைக்கு உள்ள அதிகாரம், ஒப்பந்தப் பொறுப்பை முன்னிட்டியே உருவாக்கியதால் செயல்முறையில் பறிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிதி ஒதுக்கீடு பெறுவது, முன்னமே உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற பொறுப்பைச் சட்டபூர்வமாக்காது.

எனவே, பேரவையின் நிதி மேலாண்மைத்தையும் கண்காணித்தையும் பாதித்த இவ்விவகாரத்தை, பேரவை விதி 225-ன் கீழ் அவை உரிமைக் குழுவிற்கு examination, investigation and report-க்காக அனுப்புமாறு பணிவுடன் கோருகிறேன். இப்பொருண்மை தொடர்பான சிறுகுறிப்பினையும், தேவையான ஆவணங்களையும் இதுடன் இணைத்துள்ளேன்.

அமளியில் ஈடுபட்ட திமுகவினர்; அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்

தமிழக சட்டமன்றத்தின் கடைசி நாள் இன்று... நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

TN Assembly
TN Assembly

திமுகவினரின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், "இது பொதுக்கூட்ட மேடை அல்ல, கட்சி கூட்ட மேடை அல்ல. திமுகவினர் அமைதியாக இருந்தால் பேச அனுமதிப்பேன்" என்று கூறினார்.

இருப்பினும் தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறார்.

இதனால் அவைக்காவலர்கள் சபைக்குள் வரவழைக்கப்பட்டு, அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User