IPL: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த CSK; SRH உடன் நடந்த மெகா டிரேட்! - கைமாறிய வீரர்கள் யார்?

Nov 05, 2026 - 20:00
0
IPL: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த CSK; SRH உடன் நடந்த மெகா டிரேட்! - கைமாறிய வீரர்கள் யார்?

ஏன்பா... இவரு வர்றாரா? இல்ல... அப்போ அவர் வர்றாரா? அவரும் இல்லை... பின்ன யார்தான்யா வரப்போறாங்க? இப்படிப் பல கேள்விகளுடன் CSK ரசிகர்களை டிரேட் ஹைப்பில் வைத்திருந்தது CSK மேனேஜ்மென்ட்.

ஒவ்வொரு நாளும், 'அப்டேட் குடுடா... அப்டேட் குடுடா' என CSK ரசிகர்கள் லியோவை டேக் செய்யாத நாளே இல்லை. அதேபோல, CSK மேனேஜ்மென்ட் வெளியிடும் ஒவ்வொரு போஸ்ட்டையும் டீகோட் செய்யாத ரசிகர்களும் இல்லை. அந்த அளவுக்கு CSK-வின் டிரேட் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருந்தது.

இந்த நிலையில்தான், IPL 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நான்கு வீரர்கள் அடங்கிய மெகா டிரேட் ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகிய இருவரையும் ட்ரேடிங் முறையில் தங்கள் அணிக்குக் கொண்டு வந்துள்ளது CSK.

CSK! SRH

இதில் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.6 கோடிக்கும், ஜாக் எட்வர்ட்ஸை ரூ.3 கோடிக்கும் சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கடந்த ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.13 கோடிக்கு வாங்கியிருந்தது SRH. ஆனால், தற்போது அவரை ரூ.6 கோடிக்கு CSK அணிக்கு அனுப்பியுள்ளது.

சரி, இவங்க ரெண்டு பேரையும் வாங்கிய CSK, பதிலுக்கு யாரைக் கொடுத்திருக்கிறது தெரியுமா?

சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் ஆகிய இருவரையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேட் செய்துள்ளது CSK. இதில் கலீல் அகமது ரூ.4.8 கோடிக்கும், நாதன் எல்லிஸ் ரூ.2 கோடிக்கும் SRH அணிக்குச் சென்றுள்ளனர். இப்படி நான்கு வீரர்கள் கைமாறியுள்ள இந்த டிரேட், CSK மற்றும் SRH அணிகளின் பலத்தை எந்த அளவுக்கு மாற்றப் போகிறது? புதிய வீரர்களுடன் களமிறங்கப் போகும் CSK-வின் ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User