Arasan Promo: தீபாவளிக்கு வெளியாக வேண்டிய முன்னோட்ட வீடியோ தள்ளிப்போகிறதா? காரணம் இதுதான்!

Nov 05, 2026 - 15:00
0
Arasan Promo: தீபாவளிக்கு வெளியாக வேண்டிய முன்னோட்ட வீடியோ தள்ளிப்போகிறதா? காரணம் இதுதான்!

கடந்த ஒருசில வாரத்திற்கு முன்னர், சிலம்பரசன் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு விருந்து காத்திருக்கிறது என்றும், தீபாவளி அன்று 'அரசன்' முன்னோட்ட வீடியோவான `The World of Arasan' என்ற வெளியாகவிருக்கிறது என்றும் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அன்று வெளியாகும் 'தி வேர்ல்டு ஆஃப் அரசன்' வீடியோவில் 'அரசனின் உலகம் என்ன? இந்தப் படத்தில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? எதுவரை படம் வளர்ந்திருக்கிறது? 'வடசென்னை'க்கும் இதற்குமான தொடர்ப்பு என்ன இப்படிப் பல விஷயங்களை இந்த வீடியோவில் கொண்டு வருகின்றனர்.

அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் ஒரு பக்கம் கவனித்து வருகிறார் வெற்றிமாறன் எனத் தகவல் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக வேண்டிய அந்த வீடியோ, இப்போது வெளியாகாது என்ற அடிபடுகிறது. இதுபற்றி விசாரித்ததில் கிடைத்தவை இது.

'அரசன்' படப்பிடிப்பில்.
'அரசன்' படப்பிடிப்பில்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் 'அரசன்' படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு ரிலீஸைத் திட்டத்தோடு, படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய முன்னோட்ட வீடியோ தீபாவளிக்கு வெளியாகவிருந்தது. அதில் வெற்றிமாறனின் வாய்ஸ் ஓவர், சிலம்பரசன், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன் உள்பட நடிகர்கள் பலரும் இடம்பெறுகிறார்கள்.

அவர்களின் டப்பிங், மற்றும் எடிட்டிங் வேலைகளும் நிறைவடைந்து விட்டன. 8 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவை 100 திரையரங்குகளிள் வெளியிட திட்டமிட்டுனர். ஆனால், திரையரங்கிற்கான ஃபைல் இன்னும் கொடுக்கப்படாமல் இருக்கவே, வீடியோ வெளியாகவில்லை என்ற தகவல் பரவியிருக்கிறது.

சிம்பு

படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசைக்குப் பின், வீடியோவைத் தணிக்கைக்கு அனுப்ப வேண்டும். தணிக்கை ஒப்புதலுக்குப் பிறகே தியேட்டருக்கு கண்டன்ட் கொடுக்க முடியும். ஆனால், அனிருத் இப்போது கல்யாண வேலைகளில் இருப்பதால் பின்னணி இசைப்பணிகள் இன்னும் நடைபெறாமல் இருக்கிறது.

இதுகுறித்து பட யூனிட்களில் விசாரித்தால், வெற்றிமாறனிடமும் சிம்புவிடமும் 'அரசன்' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் வெளியான வீடியோவில் உள்ள பின்னணி இசையைப் பயன்படுதி, `The World of Arasan'-னை வெளியிட்டு விடலாமா?' எனப் பலர் யோசனை தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு இருவர் தரப்பிலும் மறுத்துவிட்டனர். ''ஒரு வெயிட்டான ஃப்ரெஷ்ஷான வீடியோ வெளியாகும் தருணத்தில் இசையும் ஃப்ரெஷ் ஆக இருந்தால்தான் சிறப்பானதாக இருக்கும்.

அனிருத்
அனிருத்

அனிருத் தன் வாழ்வின் முக்கிய கட்டத்திலிருக்கிறார். அவரது கல்யாணம் முடிந்த பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம்'' என்ற முடிவில் உறுதியாக நின்றனர் என்கிறார்கள்.

இந்நிலையில் 'அரசன்' படத்தின் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர், ஹீரோ என மூவரும் முடிவு செய்து, 'ட்ரெயின்' படம் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகிறது. அன்று இந்த வீடியோவை இணைத்துவிடலாம். தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரம் திரையரங்கிலும் இந்த வீடியோ வெளியாகும். 'அரச'னுக்கு இன்னும் பலம் சேர்க்கும்'' என்ற திட்டமிட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User