இந்த வீட்டில் காஸ்ட்லியான விஷயம் எது தெரியுமா? `ஒளிதான்' - ஒளி ஓவியமான கோவை வீடு!

Nov 05, 2026 - 20:00
0
இந்த வீட்டில் காஸ்ட்லியான விஷயம் எது தெரியுமா? `ஒளிதான்' - ஒளி ஓவியமான கோவை வீடு!

கோவை நவ இந்தியாவில் 30 சென்ட் நிலத்தில், ஆர்க்கிடெக்ட் அருண் பிரசாத் வடிவமைத்துள்ள வடக்குப் பார்த்த வீடு, வெளிச்சத்தைக் கொண்டாடும் அமைப்பால் தனித்து நிற்கிறது. வீட்டின் உரிமையாளர் கொடுத்த முழுச் சுதந்திரத்தால் எந்தத் தடையுமின்றி இதை வடிவமைத்ததாக அருண் கூறுகிறார்.

இந்த வீட்டில், வலதுபுறம் படுக்கை அறைகளும் இடதுபுறம் பொழுதுபோக்குப் பகுதிகளும், நடுவில் லிவிங் ஏரியாவும் அமைந்துள்ளன. இரண்டுக்கும் நடுவே முகப்பில் உள்ள Pergola-வின் வழியாக ஊடுருவும் வெளிச்சம் ஒளி ஓவியமாக மாறுகிறது. மாலை நேரத்தில் அந்த இடம் ஏகாந்தமாகத் திகழ்கிறது.

நிலம் முழுவதையும் கட்டடமாக்காமல், சுற்றிலும் விசாலமான இடம் விடப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நுழைந்ததும் வலதுபுறம் வரவேற்பறை; அதன் பெரிய கண்ணாடிச் சுவர், புல்வெளிக்கு அருகில் அமர்ந்திருக்கும் உணர்வைத் தருகிறது. இடதுபுறம் உள்ள ஸ்லைடிங் கண்ணாடிக் கதவுகள் வரவேற்பறையையும் லிவிங் ஏரியாவையும் இணைக்கின்றன.

லிவிங் ஏரியாவை ஒட்டி மழைநீர் உள்ளே வராதவாறு கண்ணாடியால் மூடப்பட்ட முற்றம் உள்ளது. அதைத் தொடர்ந்து அமைந்துள்ள பூஜையறைக்குள் நுழைந்தால் கோயிலுக்குள் செல்லும் உணர்வு ஏற்படுகிறது. ஓப்பன் பார்ட்டி ஏரியாவின் நடுவே மேற்கூரையில்லாத Transition Space உள்ளது; அங்குள்ள கம்பிகளுக்கு இடையே ஊடுருவும் சூரிய ஒளி தரையில் ஓவியம்போல விழுந்து, பூஜை அறை வரை படர்கிறது. வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெளிச்சத்தைக் கொண்டாடும் வகையில் பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார் அருண்.

30 ஆண்டுகளாகக் கட்டட வடிவமைப்புத் துறையில் இயங்கிவரும் அருண் பிரசாத்தின் பயணம், ஓவியத்தின் மீதான ஆர்வத்திலிருந்து தொடங்கியது. கோவையைச் சேர்ந்த இவர், பள்ளிக்காலம் முதலே ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைக் குவித்தவர். ஆர்க்கிடெக்ட்டான நண்பனின் தந்தை வரைபடங்கள் வரைவதைப் பார்த்துத்தான் இவரின் கவனம் கட்டடக் கலையின் பக்கம் திரும்பியிருக்கிறது.

இந்த வீட்டில் எது காஸ்ட்லியான விஷயம் என்று கேட்டால், "ஒளிதான்" என்று புன்னகைக்கிறார் அவர்.

மேலும் இந்த வீட்டில் டெக்னாலஜிக்குப் பஞ்சமே இல்லை. லைட்டிங், கர்ட்டைன்ஸ், ஏ.சி எனப் பலவற்றையும் மொபைல் போனிலிருந்தே ஆபரேட் செய்ய முடியும் என்கிறார். இந்த வீடு குறித்த முழுமையான கட்டுரையை படிக்க...

வீடு ஒரு கனவு: 1 - ஒளியால் மிளிரும் வீடு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User