``நீங்கள் இருக்கும்போது எனக்கு நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை" - பிரதமரிடம் பேசிய சரத் பவார்

Nov 05, 2026 - 19:31
0
``நீங்கள் இருக்கும்போது எனக்கு நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை" - பிரதமரிடம் பேசிய சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான சரத் பவாருக்கு இருமல் மற்றும் மூச்சுவிடும்போது நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 2-ம் தேதி ரூபி ஹால் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது அவரது உடல்நிலை சீராகவும் நலமாகவும் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சரத் பவாரின் உடல்நிலை குறித்துப் பேசிய ரூபி ஹால் கிளினிக்கின் தலைமை இருதயவியல் நிபுணரும் தலைவருமான டாக்டர் புர்வேஸ் கே.கிராண்ட், ``வழக்கமான மருத்துவப் பரிசோதனை மற்றும் நெஞ்சு வலி தொடர் கண்காணிப்புக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது அவர் நலமாக இருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

மோடி

தற்போது தனது மும்பை இல்லத்தில் ஓய்வில் இருக்கும் சரத் பவாரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்திருக்கிறார். அந்த உரையாடல் குறித்து சரத் பவாரின் உதவியாளர் வித்தல் மணியார் செய்தியாளர்களிடம், ``அதிகாலையிலேயே தொலைபேசியில் அழைத்து சாஹேப்பின் உடல்நலம் பற்றிக் கேட்டறிந்தார். `தயவுசெய்து நீங்கள் முழு ஓய்வு எடுங்கள். சுப்ரியா தயாராக இருக்கிறார்.

சுப்ரியாவும் நாங்களும் சேர்ந்து நாட்டைப் பார்த்துக் கொள்கிறோம். எனவே நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்' எனக் கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த உரையாடல் மிகவும் அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் அமைந்திருந்தது. பிரதமரின் வேண்டுகோளுக்குப் பதிலளித்த சரத் பவார், `நான் ஓய்வெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் இருக்கும்போது எனக்கு நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. உங்களுடைய நல்ல பணிகளைத் தொடருங்கள்' என்று கூறியதுடன், தன் உடல்நலன் குறித்து விசாரித்ததற்காகப் பிரதமருக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User