திருப்பரங்குன்றம்: "48 மணி நேரத்துக்குள் பதில் வேண்டும்" - விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பிய பாஜக நிர்வாகி
"உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏன் ஏற்றவில்லை" என்று, தமிழக முதல்வர் விஜய்க்கு, ஆந்திர மாநில பாஜக நிர்வாகியும், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினருமான பானுபிரகாஷ் ரெட்டி என்பவர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீசில், "திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமல்படுத்த தவறியுள்ளனர்.
மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தபோதிலும் அங்கு தீபம் ஏற்றப்படாமல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள பாரம்பரிய இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டதாக கோயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்திருப்பதால் மட்டுமே அந்த உத்தரவுதானகவே நிறுத்தி வைக்கப்படாது. சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ செய்யும்வரை அதிகாரிகள் அதை அமல்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும்.
இந்திய அரசியலைமைப்பு சட்டம் 25, 26 மற்றும் 144 பிரிவுகளின்படி உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கி செயல்படவேண்டிய கடமை அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததற்கான காரணஙகளை தமிழக அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். மேலும், இது தொடர்பான கண்கானிப்பு கேமரா காட்சிகள், வீடியோ பதிவுகள், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள், அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற கடித பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களயும் பாதுகாக்க வேண்டும்.
நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனைச் செயல்படுத்த தவறியதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும்.
தமிழக அரசிடமிருந்து திருப்தியான பதில் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கபட்டுள்ளது.
இதன் நகல்கள் தமிழக தலைமைச்செயலாளர் முதல் மதுரை மாவட்ட நிர்வாகம் வரைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)