கடகம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: பணவரவு திருப்தி; பேச்சில் கவனம்.! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

Nov 27, 2026 - 11:31
0
கடகம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: பணவரவு திருப்தி; பேச்சில் கவனம்.! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் குடும்பத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் பெருகும். நல்ல வேலை கிடைக்கும். எனினும், எதிலும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கப் பாருங்கள். ஜாமீன், கேரண்டி என்று கையெழுத்திட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் கடகம்

2. வீட்டில் கணவன் மனைவிக்குள் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும். சிறு பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். அவரின் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். வெளி ஆட்கள் குடும்பத்தில் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பீர்கள்.

3. ராகு 5.12.2026 முதல் 11.3.2027 வரை செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்வதால் சந்தோஷம் தேடி வரும்; பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சொத்துச்சேர்க்கை உண்டு.

4. ராகு சந்திரனின் நட்சத்திரத்தில் செல்லும் 11.3.2027 முதல் 18.12.2027 வரை எதையும் சமாளிக்கும் மன தைரியம் உண்டாகும். உடல்நலக் குறைபாடுகள் வரும்; சமாளிப்பீர்கள். சூரியனின் நட்சத்திரத்தில் 18.12.2027 முதல் 23.6.2028 வரை சஞ்சரிக்கும்போது பேச்சில் கவனம் தேவை.

5. கேது உங்கள் ராசியிலேயே அமர்ந்து பலன் தரப்போகிறார். இனி சமயோஜித புத்தியுடன் பேசவைப்பார். ஆக்கபூர்வமாக யோசித்து செயல்படுவீர்கள். எடுத்த வேலையை முடிப்பதற்குள் சில தடைகள் வந்தாலும் இறுதியில் வெற்றி கிட்டும்.

6. சில தருணங்களில் கடன் குறித்து பயம் எழும். எனினும், குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். சிலருக்குத் தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், சலிப்பு, டென்ஷன் வந்து நீங்கும்.

7. கேது புதனின் நட்சத்திரத்தில் 5.12.2026 முதல் 14.8.2027 வரை செல்வதால் தடைப்பட்ட காரியங்கள் முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சனியின் நட்சத்திரத்தில் 14.8.2027 முதல் 22.4.2028 வரை செல்வதால், குறிப்பிட்ட அந்தக் காலத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும்.

8. 2028 ஏப்ரல் நிறைவில் கேது குருவின் குருவின் நட்சத்திரத்தில் செல்கிறார். அப்போது புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு. வாகனத்தை மாற்றுவீர்கள். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

9. இந்த ராசியைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்குப் பிள்ளைகளால் மன நிம்மதியுண்டு. குடும்பத்தார் உங்கள் வார்த்தைக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள். பழைய தங்கத்தை கொடுத்து விட்டு புது டிசைனில் நகைகள் வாங்குவீர்கள்.

10. வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்க வாய்ப்புண்டு. புது டீலர்சிப், ஏஜென்ஸி எடுப்பீர்கள். இரும்பு, உணவு வகைகள், எண்ணெய் வகைகளால் லாபமீட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் போட்டிகள் இருந்தாலும் தளராமல் வெற்றி பெறுவீர்கள்.

11. உத்தியோகத்தில் சவால்களைக் கடந்து எல்லோரும் வியக்கும்படி சில விஷயங்களில் சாதிப்பீர்கள். தொந்தரவு கொடுத்துவந்த அதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். கலைத் துறைக்கு பழைய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரக்கூடும். கணினித் துறையினர், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளில் சாதிப்பார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User