உதயநிதி பிறந்தநாள் பேனர்: ``ஒருசிலரது இருப்பைக் காட்ட 2 உயிர்களை இழந்துள்ளோம்" - நிர்மல் குமார்

Nov 27, 2026 - 11:31
0
உதயநிதி பிறந்தநாள் பேனர்: ``ஒருசிலரது  இருப்பைக் காட்ட 2 உயிர்களை இழந்துள்ளோம்" - நிர்மல் குமார்

திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் திருவள்ளூர் வாணியன் சத்திரம் பகுதியில் திமுகவினர் வாழ்த்து பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பேனர் மீது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் காரணி கிராமத்தைச் சேர்ந்த வேலன், வாணியன் சத்திரத்தைச் சேர்ந்த வீரேந்தர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆல்பர்ட் என்ற இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தன் எக்ஸ் பக்கத்தில், ``திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் இருவர் உயிரிழந்தனர்.

ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருசிலரது இருப்பைக் காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிர்களை இழந்துள்ளோம். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User