CJP: வெளிநாடு செல்வதைத் தடுக்க காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்

Nov 27, 2026 - 10:02
0
CJP: வெளிநாடு செல்வதைத் தடுக்க காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்

காக்ரோச் ஜனதா கட்சியினர் கடந்த மாதம் டெல்லி மற்றும் மும்பையில் தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறியும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், அக்டோபர் 2ம் தேதி தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய சலோ மும்பை போராட்டத்தை நடத்தியது.

ஆனால் இதற்கு மும்பை போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. அனுமதி கொடுக்காத நிலையில் போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மும்பை போலீஸார் காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்கள் அபிஜித் திப்கே, அசுதோஷ் ரங்கா, செளரவ் தாஸ் ஆகியோருக்கு எதிராக மும்பை போலீஸார் தேடுதல் நோட்டீஸ் எனப்படும் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.

லுக்-அவுட் நோட்டீஸ் (LOC) என்பது, சட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் பிற நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் வழியாக வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கில் இமிகிரேஷன் அதிகாரிகளை எச்சரிக்கும் நடவடிக்கையாகும்.

மும்பையில் நடந்த போராட்டத்தில் நடிகர் நஷ்ருதீன் ஷா, ஷாபானா ஆஸ்மி, திரைப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தன் உட்பட 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இதில் சட்டவிரோதமாகக் கூடியது, போலீஸ் உத்தரவுகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சி.ஜே.பி (CJP) தலைவர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் மீது போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. சி.ஜே.பி தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதைத் தடுக்கும் வகையிலேயே இந்த லுக்-அவுட் சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள மூன்று சி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான சௌரவ் தாஸ், நவம்பர் 23-ஆம் தேதி இங்கிலாந்து செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து, அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார், ஆனால் நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.

தாஸுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸ் காரணமாகவே அவர் வெளிநாடு செல்வது தடுக்கப்பட்டதாக அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் லுக் அவுட் நோட்டீஸ் குறித்து தங்களுக்கு எந்த வித தகவலும் கொடுக்கப்படவில்லை என்று தாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தாஸ் லண்டனில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உரையாற்ற திட்டமிட்டு இருந்தார். மேலும், தாஸின் பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த இடம் தொடர்பான முரண்பாடுகள் குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User