மீனம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி : பணப்புழக்கம் அதிகரிக்கும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

Nov 27, 2026 - 13:02
0
மீனம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி : பணப்புழக்கம் அதிகரிக்கும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. ராகு பகவான் லாப வீட்டிற்கு வருவதால் சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மீனம்

2. வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் திகழ்வீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைகள் தீரும்.

3. குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும். மகளின் திருமண முயற்சிகளில் தடைகள் விலகும். மகனுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

4. ராகு செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும்போது (5.12.26 முதல் 11.3.27 வரை) புதுச் சொத்து, வீடு வாங்குவீர்கள். பணப்புழக்கம் இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சாதகமாக முடியும்.

5. ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் செல்லும்போது (11.3.27 முதல் 18.12.27 வரை) எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைத்த நேரத்தில் நடந்தேறும். சூரியனின் நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது (18.12.27 முதல் 23.6.28 வரை) அரசு வேலைகள் முழுமையடையும். தந்தை வழியில் நிம்மதி கிட்டும்.

6. கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். ஞானம், பக்தி அதிகரிக்கும். எனினும் பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் ஏற்படலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவேண்டும்.

7. உத்தியோகம் அல்லது கல்வியின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரிந்து செல்வார்கள். அவர்களின் திருமண விஷயத்தில் அவசரம் கூடாது. கர்ப்பிணிகள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கவும். அலட்சியப்படுத்திய நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். தாய் வழி உறவுகளால் சங்கடங்கள் வரும். அவ்வப்போது எதையோ இழந்ததைப்போல் மனம் தத்தளிக்கும்.

8. கேது புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது (5.12.26 முதல் 14.8.27 வரை) பழைய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அவர்கள் மூலம் சிற்சில விஷயங்களில் ஆதாயம் உண்டாகும்.

9. சனியின் நட்சத்திரத்தில் கேது பகவான் (14.8.27 முதல் 22.4.28 வரை) செல்லும்போது, மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரவு உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். அவர், குருவின் நட்சத்திரத்தில் செல்லும்போது (22.4.28 முதல் 23.6.28 வரை) எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. உடல் நலம் சீராகும்.

10. இல்லத்தரசிகளுக்கு, ஆபரணச் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் அதீத முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகள் வேண்டாம். ஹோட்டல், இரும்பு, எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும்.

11. உத்தியோகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரி இணக்கமாக இருப்பார். கணினித் துறையினருக்கு, நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடு செல்வீர்கள். கலைத் துறையினருக்குப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். தக்கபடி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User