கன்னி |2026 ராகு-கேது பெயர்ச்சி: திடீர் யோகம் தேடி வரும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்
1. இந்த ராகு-கேது பெயர்ச்சியில் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எனினும், சொந்த பந்தங்களிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எவ்விதமான பிரச்னைகளையும் பேசித் தீர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

2. வீட்டில் தம்பதிக்கு இடையே சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் வீண் சந்தேகம், வாக்குவாதம் செய்வது கூடாது. குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள்.
3. அடுத்த ஒன்றரை வருட காலம், அவ்வப்போது இனம்புரியாத கவலைகள் எழலாம். தெய்வ வழிபாட்டில் மனத்தைச் செலுத்தி, நன்மை பெறுங்கள். வெளியிடங்களில், புதியவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. ஆவணங்கள் விஷயத்தில் அலட்சியம் கூடாது.
4. ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும்போது (5.12.26 முதல் 11.3.27 வரை) ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வீண் செலவுகள், பண இழப்புகள் ஏற்படும். ஆகவே, எதிலும் அலட்சியம் இல்லாமல் இருக்கவேண்டும்.
5. சந்திரனின் நட்சத்திரத்தில் செல்லும்போது (11.3.27 முதல் 18.12.27 வரை) பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சூரியனின் நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது (18.12.27 முதல் 23.6.28 வரை) அரசு வேலைகளில் வெற்றியுண்டு. சரியான தூக்கமில்லாமல் அவதிப்படுவீர்கள்.
6. கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பல வகைகளிலும் திடீர் யோகங்கள் ஏற்படும். புது வாகனம், சொந்த வீடு அமையும். வீட்டில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும். மனக்குழப்பம், வீண் அலைச்சல் விலகும். பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
7. சகல வகையிலும் மறைமுக எதிரிகள் அடங்குவார்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு. எடுத்த காரியத்தை நினைத்ததை முடிப்பீர்கள். சொத்து விஷயங்களில் இழுபறி நிலை மாறும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.
8. கேது புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது (5.12.26 முதல் 14.8.27 வரை) தொட்ட காரியங்கள் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். சனியின் நட்சத்திரத்தில் (14.8.27 முதல் 22.4.28 வரை) செல்லும்போது, பிள்ளைகளுக்கு வெளிமாநிலம், வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
9. குருவின் நட்சத்திரத்தில் செல்லும்போது (22.4.28 முதல் 23.6.28 வரை) எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. உடல்நலனில் கவனம் தேவை.
10. இல்லத்தரசிகளுக்கு கையில் காசு, பணம் புரளும். விரும்பிய தங்க நகைகளை வாங்குவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் நிம்மதி உண்டாகும். சாதுர்யமான பேச்சால் லாபமீட்டுவீர்கள். தொழில் ஸ்தானத்தை வேறு இடத்துக்கு மாற்றும் சூழல் வரலாம்.
11. உத்தியோகத்தில் மேலதிகாரியுடனான வாக்குவாதங்கள் நீங்கும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கணினித் துறையினருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேறு நிறுவனத்தில் வாய்ப்பு வரும். கலைத்துறையினருக்கு, உங்களைத் தேடி நல்ல வாய்ப்புகள் வரும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)