"கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகளைத் திறக்க ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன?" - அன்புமணி கேள்வி

Nov 27, 2026 - 13:32
0
"கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகளைத் திறக்க ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன?" - அன்புமணி கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நடத்துவதில் முக்கிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம் இதுவரை நேரடியாக நடத்தி வந்த மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை, இனி அதன் முகவர்களாகச் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்குவது ஆபத்தானது. தனியார்மயம், மது வணிகம் அதிகரிக்கவும் வழி வகுக்கக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழ்நாட்டில் சில்லரை மது வணிகத்தை டாஸ்மாக் நிறுவனம் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களும் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் விரும்பினால் டாஸ்மாக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப மதுக்கடைகளைத் திறந்து கொள்ளலாம்;

அவ்வாறு திறக்கப்படும் மதுக்கடைகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு ஆபத்தானது.

மது அத்தியாவசியமான பொருள் அல்ல. தமிழ்நாட்டில் தேவைக்கும் அதிகமாகவே மதுக்கடைகள் உள்ளன என்பதால், புதிய மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று சில நாள்களுக்கு முன்பு தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்திருந்தது. அதற்குள்ளாக கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன?

2002-03ஆம் ஆண்டில் மது வணிகம் முழுக்க முழுக்க அரசுடைமையாக்கப்படுவதற்கு முன்பாக தனியாரும், கூட்டுறவு சங்கங்களும் தான் மதுக்கடைகளை நடத்தின. அப்போது அவற்றில் சட்ட விரோதமாக மது வணிகம் செய்யப்பட்டது, ஓர் இடத்தில் உரிமம் பெற்றுக்கொண்டு, இப்போது செயல்படும் சந்துக்கடைகளைப் போல பல இடங்களில் கிளைகள் திறந்து மது விற்பனை செய்யப்பட்டது, மதுக்கடைகளிலேயே கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால்தான் தனியார் மதுக்கடைகள் மூடப்பட்டு 2002-03 -ம் ஆண்டில் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

ஆனால், அந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, இப்போது கூட்டுறவுச் சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அரசு அனுமதித்தால் இது இத்துடன் நிற்காது. அடுத்தகட்டமாக தனியாரும் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்கப்படும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாகப் பாயும். சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சட்டப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டத்தால் தான் அவற்றின் எண்ணிக்கை இப்போது 4048 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மதுக்கடை வணிக நேரமும் 16 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக முழு மதுவிலக்கை நோக்கித்தான் அரசு பயணிக்க வேண்டுமே தவிர மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படக் கூடாது.

எனவே, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதுக்கடைகளை நடத்த அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User