Sreenath Bhasi: "மனைவியிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறேன்!" - நடிகர் ஶ்ரீநாத் பாஸி
'கும்பளங்கி நைட்ஸ்', 'பீஷ்ம பர்வம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, தனது மனைவி ரீது ஜக்காரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதை பற்றித் தெரிவித்திருக்கிறார்.
2024-ஆம் ஆண்டிலேயே இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கிவிட்டதாகவும், தற்போது ஸ்ரீநாத் பாசி, பெற்றோர் உடன் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநாத் பாசி, பிஜூ மேனன் ஆகியோர் நடித்திருக்கும் 'அவரச்சன் & சன்ஸ்' திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு அளித்த பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
இது குறித்து ஸ்ரீநாத் பாசி பேசுகையில், "நாங்கள் 2024-லேயே பிரிந்துவிட்டோம். விவாகரத்துக்குப் பிறகு நான் மீண்டும் என்னுடைய பெற்றோருடனே தங்கி வருகிறேன்.
இதுவரை இந்த விஷயம் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இப்போது இந்தப் பேட்டியின் மூலமாக அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

வீட்டில் சில நேரங்களில் அப்பாவிடம் சண்டை போடும்போது, 'இனிமேல் நாம் ஒன்றாக இருக்க முடியாது, இதெல்லாம் சரிவராது' என்று நினைப்பேன்.
ஆனால், சண்டை போட்டுவிட்டு அறைக்குச் செல்லும்போதுதான், பெற்றோர் இல்லாமல் என்னால் வாழவே முடியாது என்பதை உணர்வேன். அந்த உணர்வு மிகவும் கடினமானது. இப்போது வாழ்க்கையின் இந்த நிலையை இயல்பாக அனுபவிக்க முயற்சித்து வருகிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.
ஸ்ரீநாத் பாசி தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் பணியாற்றிய காலத்தில், ரீது ஜக்காரியாவை முதன்முதலில் சந்தித்திருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)