"இராவணன் அவ்வளவு கெட்டவர் கிடையாது" - சாய் பல்லவியின் பேச்சுக்கு இணையத்தில் கிளம்பிய எதிர்ப்பு

Oct 30, 2026 - 12:00
0
"இராவணன் அவ்வளவு கெட்டவர் கிடையாது" - சாய் பல்லவியின் பேச்சுக்கு இணையத்தில் கிளம்பிய எதிர்ப்பு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராமாயணா’.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.

இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சாய் பல்லவி
சாய் பல்லவி

இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நடிகை சாய் பல்லவி இராவணன் குறித்து பேசியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சுக்குச் சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இராவணன் குறித்து பேசிய சாய் பல்லவி, "இராவணன் அவ்வளவு கெட்டவர் கிடையாது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு இராவணன் இருக்கிறான்.

அவனைச் சரியாகக் கண்டறிந்து நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது தீய குணங்களை நாம் கண்டறிந்து, காலப்போக்கில் நம்மை நாமே மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியம்" என்று பேசியிருக்கிறார்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

சீதை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒருவரே இராவணனைப் புகழ்ந்து பேசுவதா எனச் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் மற்றொரு தரப்பினர், இராவணனிடம் இருந்த சிவபக்தி, அறிவு போன்ற அம்சங்களைச் சுட்டிக்காட்டி சாய் பல்லவியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், மனிதனுக்குள் இருக்கும் தீய குணங்களை வெல்ல வேண்டும் என்ற நேர்மறையான எண்ணத்திலேயே அவர் பேசியிருக்கிறார் என்றும் தெரிவித்துவருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User