Patrick Stewart: Star Trek, X-Men புகழ் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

Oct 30, 2026 - 11:30
0
Patrick Stewart: Star Trek, X-Men புகழ் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

1987-ம் ஆண்டு வெளியான Star Trek: The Next Generation தொலைக்காட்சித் தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிகார்டாக (Jean-Luc Picard) நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் (Patrick Stewart).

தொடர்ந்து பல ஆண்டுகள் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிவியல் புனைக்கதை உலகில் தனக்கென இடத்தைப் பிடித்தார். அதேபோல், 2000-ம் ஆண்டு வெளியான X-Men திரைப்படத்தில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் (Professor Charles Xavier) கதாபாத்திரத்தில் நடித்து புதிய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களும் அவரது திரைப்பயணத்தின் அடையாளங்களாக மாறின.

நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்
நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்

1940-ம் ஆண்டு இங்கிலாந்தின் யார்க்சயரில் பிறந்த பேட்ரிக் ஸ்டீவர்ட், சிறுவயதிலேயே நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டார். 1960-களில் ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தில் இணைந்து பல நாடகங்களில் நடித்தார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அவர் வெளிப்படுத்திய நடிப்புத் திறன் பெரும் பாராட்டைப் பெற்றது.

தனது 60 ஆண்டுகால கலைப் பயணத்தில் மூன்று ஒலிவியர் விருதுகள் உள்ளிட்ட பல அங்கீகாரங்களைப் பெற்றார். கலைத்துறைக்கான பங்களிப்பைப் பாராட்டி 2010-ம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவருக்கு 'நைட்' பட்டம் வழங்கினார்.

இந்த நிலையில் 85 வயதைக் கடந்த நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட்க்கு அல்சைமர், லூயி பாடி டிமென்ஷியா பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதனுடனே அவர் தனது இறுதிக்காலத்தைக் கழித்ததாகவும் அவரது நீண்டகால செய்தித் தொடர்பாளர் கெல்லி புஷ் நோவாக் தெரிவித்துள்ளார்.

நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்
நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் அக்டோபர் 28-ம் தேதி, அவரின் மனைவி சன்னி ஓசலின், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ 86-வது வயதில் அவர் உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் மார்வெலின் Avengers: Doomsday திரைப்படத்தில் பேராசிரியர் சேவியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேடை நாடகத்திலிருந்து ஹாலிவுட் வரை தனது தனித்துவமான குரலாலும் நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User