"ஹீரோவாக ஏற்ற பின், வில்லன் கேரக்டர் ஏன் என யோசிக்கிறேன்.!"- சிவகார்த்திகேயன்

Oct 26, 2026 - 13:00
0
"ஹீரோவாக ஏற்ற பின், வில்லன் கேரக்டர் ஏன் என யோசிக்கிறேன்.!"- சிவகார்த்திகேயன்

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் ஆங்கிரிங் பண்ணும்போது எந்த கவலையும், பிரஷரும் இல்லாமல் இருந்தது. அதுதான் எனக்கு சினிமாவில் ரசிகர்களை கொடுத்தது.

என் மீது காசு போட்டு படம் எடுக்கலாம் என்று தயாரிப்பாளர்களை உருவாக்கியது. அதை மறக்கவே மாட்டேன். நான் டிவியில் இருந்தபோது சினிமா பண்ண வேண்டும் என்று பலர் சொன்னார்கள்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

அப்போது பசங்க பட இயக்குநர் பாண்டியராஜ் படம் பண்ண இருந்தார். நான் ஆடிசன் போனேன். மறுநாளே உங்களுக்கு படப்பிடிப்பு இருக்கிறது. மெரினா வந்திடுங்கள் என்றார்.

எனக்கு பயம், சந்தேகம் இருந்தது. அதனால், பட போஸ்டர் வரும் வரை அந்த படம் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. ஒருநாள் என் பட போஸ்டர் வந்தபோது என் அம்மா கேட்டார்.

ஆமாம், படம் பண்ணுகிறேன் என்று சொன்னேன். உன் மனைவிக்கு தெரியுமா? என்று கேட்டார். இன்னும் சொல்லவில்லை என்றேன். அப்படி தான் அந்தப் படத்தில் நடித்தேன்.

பெண் வேடம் உட்பட பல கேரக்டரில் நடித்துவிட்டேன். அதை துணிந்து நடித்த என் சொந்த கேரக்டரை ரொம்ப பிடிக்கும். பாக்ஸ் ஆபீஸ் ரிசல்ட் பார்த்து நடிக்கவில்லை.

அனைத்து படங்களையும் ரசித்து 60, 70 நாட்கள் நடிக்கிறேன். அடுத்து அமரன் மாதிரி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். வில்லன் கேரக்டர் எனக்கு வரவில்லை.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

நான் மக்களை என்டர்டெயின்ட்மென்ட் பண்ண ஆசைப்படுகிறேன். அதனால், வில்லனாக நடிக்க யோசித்து பார்க்கவில்லை. அப்படி சில கதைகள் வந்து இருக்கிறது.

ஒருவேளை ஜாலியாக, பொழுது போக்கு வில்லனாக, டூயட் ரோல் ஆக அமைந்தால் நல்லா இருக்கும். ஹீரோவாக ஏற்றபின், வில்லன் கேரக்டர் ஏன் என யோசிக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User