சாலையில் கிடந்த 2 பவுன் நகை; காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவனுக்குப் குவியும் பாராட்டு

Oct 30, 2026 - 11:30
0
சாலையில் கிடந்த 2 பவுன் நகை; காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவனுக்குப் குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 13). இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

2 பவுன் தங்க நகைகள்

மாணவன் தமிழரசன் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது வழியில் சாலையில் ஒரு சிறிய நகைப்பெட்டி கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டான். சந்தேகமடைந்த அவன் அந்தப் பெட்டியை எடுத்து திறந்து பார்த்தான்.

அப்போது அதில் 15.600 கிராம் (சுமார் 2 பவுன்) எடையுள்ள தங்கச் சங்கிலி மற்றும் தங்க கைச்செயின் (பிரேஸ்லெட்) இருப்பது தெரியவந்தது.

மாணவனுக்குப் குவியும் பாராட்டு
மாணவனுக்குப் குவியும் பாராட்டு

காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

சாலையில் கிடந்த தங்க நகையைக் கண்டு ஆசைப்படாத மாணவன் தமிழரசன், உடனடியாக அந்த நகைப்பெட்டியை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றான். அங்குத் தனது தலைமை ஆசிரியை நாச்சம்மை, வகுப்பாசிரியர் ஞானமணி ஆகியோரிடம் நகையைக் காட்டி நடந்த விபரத்தைக் கூறினான்.

மாணவனின் நேர்மையைப் பாராட்டிய தலைமை ஆசிரியை நாச்சம்மை, அவனை உடனடியாக பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் வீரமுத்துவிடம் தங்கச் சங்கிலி மற்றும் கைச்செயினை மாணவன் தமிழரசன் நேரில் ஒப்படைத்தான்.

பாராட்டு மழை

நேர்மை ஒன்றையே தன் கொள்கையாகக் கொண்டு செயல்பட்ட அரசுப் பள்ளி மாணவன் தமிழரசனை பள்ளி ஆசிரியர்கள், காவல்துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

"பள்ளியில் கற்றுக்கொடுக்கும் கல்விக்கு உண்மையான இலக்கணமாகத் திகழ்கிறான் இந்தத் தமிழரசன்!" என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக இருக்கிறது!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User