'நான் வெள்ளையாக இல்லை, அதனால் எனக்கு வாய்ப்புகள்.!'- தென்னிந்திய சினிமா குறித்து ராதிகா ஆப்தே

Oct 30, 2026 - 12:00
0
'நான் வெள்ளையாக இல்லை, அதனால் எனக்கு வாய்ப்புகள்.!'- தென்னிந்திய சினிமா குறித்து ராதிகா ஆப்தே

தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப் சீரிஸ் ’அக்கா’.

பெண்கள் ஆளும் கற்பனை கேங்ஸ்டர் உலகை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வெப் சீரிஸ் இன்று (அக்.30) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் புரொமோஷனுக்காக ஆங்கில ஊடகத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ராதிகா ஆப்தேவிடம், 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்திய திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அக்கா
அக்கா

அதற்கு பதிலளித்த அவர், " எனது பார்வையில், வடஇந்திய நடிகைகள் வெள்ளையாக இருப்பதால்தான் தென்னிந்திய திரைப்படங்களில் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

நான் அதிகம் வெள்ளையாக இல்லை. தென்னிந்திய படங்களில் நடிக்க தென்னிந்திய நடிகைகளையே தேர்வு செய்யலாமே? எதற்காக வடஇந்திய நடிகைகளைத் தேடிச் செல்கிறார்கள்?.

தென்னிந்திய நடிகைகள் அழகானவர்கள், திறமையானவர்கள். அந்தந்த மொழிகளையும் நன்றாக அறிந்தவர்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

வேறு மொழி நடிகைகளை நடிக்க வைத்து, அவர்களுக்குப் பதிலாக மற்றொருவரை டப்பிங் பேச வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதுபோன்ற நடைமுறைகளை நான் ஊக்குவிக்க விரும்பவில்லை.

 ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே

தென்னிந்திய மொழிகள் தெரியாததால் அந்த மொழிகளில் நடிப்பது எனக்கு சவாலாக இருக்கிறது. வசனங்களைப் பேசுவது மட்டுமின்றி காட்சிகளுக்கு ஏற்ப இயல்பாக நடிப்பதற்கும் மொழி அறிவு அவசியம்" என்று பதில் அளித்திருக்கிறார்.

'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'வெற்றி செல்வன்', ரஜினிகாந்தின் 'கபாலி' உள்ளிட்ட படங்களில் நடித்த ராதிகா ஆப்தே கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான 'சித்திரம் பேசுதடி 2' என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User