PoK போராட்ட செய்தி: 'நியூயார்க் டைம்ஸ்' இதழின் தலைப்புக்கு இந்தியா கடும் கண்டனம்!

Jul 30, 2026 - 18:31
0
PoK போராட்ட செய்தி: 'நியூயார்க் டைம்ஸ்' இதழின் தலைப்புக்கு இந்தியா கடும் கண்டனம்!

PoK-வின் மிர்பூர் பகுதியில் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராகச் சிவில் உரிமைக் குழுக்கள் திரண்டபோது வன்முறை வெடித்தது. அதிகரிக்கும் விலைவாசி உயர்வு, செலவு, நிர்வாக அலட்சியம், அரசியல் பாகுபாடு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அத்துமீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' (JAAC) தலைமையில் கடந்த மாதம் முதல் இங்குப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

ரவாலகோட்டில் இருந்து முசாஃபராபாத் வரை JAAC நடத்திய நீண்ட பேரணியின் போது, பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கொடூரமான ஒடுக்குமுறையைக் கையாண்டன. இந்த மோதலில் JAAC-ன் மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரரான உஸ்மான் நசீர் உட்பட 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 33-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

இந்த வன்முறை குறித்த செய்தியை பதிவு செய்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, PoK-வை 'பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர்' எனக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் கவலையையும் சுட்டிக்காட்டியுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து வரும் வன்முறைச் சுழற்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் காயங்கள் குறித்துச் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ள செய்தியை வெளியிட்டிருக்கிறது.

இந்த வன்முறையைக் குறிப்பிட்டு, ``உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பாகிஸ்தானிய காஷ்மீரில் மோதல்கள் வெடித்தன" என்ற தலைப்பில் நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள இந்தியத் தூதரகம், "தி நியூயார்க் டைம்ஸ் செய்தியின் தலைப்பு தவறாக வழிநடத்துகிறது மற்றும் பிழையானது. 'பாகிஸ்தானிய காஷ்மீர்' என்று எதுவும் இல்லை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டுமே உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். பாகிஸ்தான் இப்பகுதிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அங்குள்ள மக்கள் மீது வன்முறையைப் பிரயோகித்து வருகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User