Jailer 2 Exclusive: "ரஜினி சார் பார்க்க சொன்ன Web Series அதான்" - மிர்னா மேனன் பகிரும் தகவல்

Oct 11, 2026 - 19:00
0
Jailer 2 Exclusive: "ரஜினி சார் பார்க்க சொன்ன Web Series அதான்" - மிர்னா மேனன் பகிரும் தகவல்

'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்தில் நடிகை மிர்னா மேனன் கவனம் ஈர்த்து நல்ல பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

இப்போது 'ஜெயிலர் 2' ரிலீஸுக்காகவும் அவர் உற்சாகமாக இருக்கிறார். இந்த நேரத்தில் 'ஜெயிலர் 2'வுக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

ஜெயிலர் 2
ஜெயிலர் 2

நம்மிடையே பேசியவர், "ஜெயிலர் படத்தின் முதல் பாகம் முடிவடையும்போது, 'இனிமேல் ரஜினி சார் கூட எப்ப வேலை பார்க்கப் போறோம்?' என்று நினைத்து வருத்தப்பட்டேன்.

ஆனால் படம் வெளியாகி, அந்த ஹைப் முடிவதற்குள்ளாகவே 'ஜெயிலர் 2' உருவாகப் போகிறது என்ற செய்தி வந்ததும் எனக்குப் பயங்கர சந்தோஷமாக இருந்தது. மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன்.

'ஜெயிலர் 1' படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது, 'ரஜினி சார் கூட நடிச்சா உன் வாழ்க்கையே மாறும்' என்று பலர் சொன்னார்கள். அது அப்படியே உண்மையாகவும் நடந்தது.

'ஜெயிலர்' படத்திற்கு முன், 'ஜெயிலர்' படத்திற்குப் பின் என்று என் வாழ்க்கையே ஒரு பெரிய மாற்றம் அடைந்தது. அந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்தின் நேர அளவு மிகவும் குறைவாக இருந்தாலும், மக்களின் மனதில் அது ஆழமாகப் பதிந்தது.

மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளில் நான் நடித்திருந்தாலும், இன்று எங்கு சென்றாலும் என்னை 'ஜெயிலர் நடிகை' என்றுதான் அடையாளம் காண்கிறார்கள். அதைக் கேட்கும்போது எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது.

உண்மையில், ஜெயிலர் வெற்றியடைந்த சமயத்திலேயே என் நண்பர்கள் சிலர் 'கண்டிப்பாக இரண்டாம் பாகம் வரும் பார்' என்றார்கள். அதற்கு நான், 'ரஜினி சார் இதுவரை பாட்ஷா, படையப்பா, பேட்டா என எந்தப் படத்திற்கும் பார்ட் 2 நடித்ததே இல்லையே, அப்புறம் எப்படி ஜெயிலர் 2 வரும்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை, இந்தக் கதையின் உலகத்திற்கு அந்தத் திறன் இருக்கிறது' என்றார்கள்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக 'ஜெயிலர் 2' உறுதியானபோது எனக்குப் பெரிய ஆச்சரியமாகவும் ஷாக்காவும் இருந்தது. ரஜினி சார் எப்போதும் ஜாலியாக நகைச்சுவையாகப் பேசுவார்.

Actress Mirna Menon
Actress Mirna Menon

சில சமயங்களில் ஆன்மீகம் சார்ந்தும் சில விஷயங்களைச் சொல்வார். அவரிடம் பேசும் ஒவ்வொரு உரையாடலிலும் நாம் ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொள்ளலாம். சினிமா விஷயங்கள், எந்தெந்தப் புதிய இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள் என்பது வரை அனைத்தையும் அப்டேட்டாக வைத்திருப்பார்.

பல மொழிகளில் வெளியாகும் வெப் சீரிஸ் வரை எதையும் விடாமல் பார்ப்பார். முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போது அவர் என்னிடம் 'நான் பிரேக்கிங் பேட் வெப் சீரிஸ் பார்த்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. நீங்களும் பாருங்கள்' என்றார்.

அதற்கு நான் 'சார், இரண்டு நாட்களுக்கு முன்புதான் அதை முழுதாகப் பார்த்து முடித்தேன்' என்றேன். ஒரு சிறிய சட்டையில் இருக்கும் சுருக்கத்தைக் கூட கவனிக்கும் அளவுக்குத் தன் வேலையில் மிகவும் கவனமாக இருப்பார்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User