"மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட உணர்வு கிடைத்திருக்கிறது"- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதென்ன?

Oct 09, 2026 - 13:30
0
"மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட உணர்வு கிடைத்திருக்கிறது"- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதென்ன?

'காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘லவ்’.

இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த சீரிஸை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருக்கிறார்.

அக்.2 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் இந்த சீரிஸ் வெளியானது. இந்த சீரிஸ் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா லக்ஷ்மி கலந்துகொண்ருந்தார்.

ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி

அப்போது அவரிடம் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " சமூக வலைதளங்களில் இருந்து விலகிய பிறகு எனக்கு மன அமைதி கிடைத்திருக்கிறது. தேவையில்லாத மன அழுத்தங்களில் மற்றும் ஒப்பீடுகளில் இருந்து விடுபட்ட உணர்வு கிடைத்திருக்கிறது.

சமூக வலைதளப் பயன்பாட்டை குறைத்ததால் எனது சொந்த வேலைகள் மற்றும் கலைப் பயணத்தில் முழு கவனத்தையும் செலுத்த முடிகிறது. என் வாழ்க்கையில் நான் தற்போது இருக்கும் இந்த இடத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

"நான் இருக்கும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன். ஆனால், சமூக ஊடகங்கள் என்னை தலைகீழாக மாற்றி இருக்கின்றன. எனது பணிகளில் இருந்து என்னை வெற்றிகரமாக திசைதிருப்புகிறது.

ஐஸ்வர்யா லட்சுமி | Aishwarya Lekshmi
ஐஸ்வர்யா லட்சுமி | Aishwarya Lekshmi

என்னுள் இருந்த சிந்தனையைப் பறித்துவிட்டது. என் சொல்லகராதி மற்றும் மொழியைப் பாதித்துள்ளது" என்று பதிவிட்டு கடந்த வருடம் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ஐஸ்வர்யா லக்ஷ்மி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User