லாபத்துக்கு வரி கட்டத் தேவை இல்லாத GIFT City ஃபண்டுகள்; NRI முதலீட்டாளர்களுக்கு அருமையான வாய்ப்பு!

Oct 11, 2026 - 19:00
0
லாபத்துக்கு வரி கட்டத் தேவை இல்லாத GIFT City ஃபண்டுகள்; NRI முதலீட்டாளர்களுக்கு அருமையான வாய்ப்பு!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ரியல் எஸ்டேட், பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் என அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பல. இவற்றில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். GIFT City மூலமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.

Gift City for NRIs

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் GIFT City பற்றி அரசல்புரசலாகக் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால், அதை முழுமையாக நீங்கள் தெரிந்துகொள்வதற்கு உங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

GIFT City என்பது குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அமைத்திருக்கும் ஒரு சர்வதேச நிதி மையம். Gujarat International Finance Tech என்பதன் சுருக்கம்தான் GIFT. இந்த நகரில் அமைந்திருக்கும் GIFT City மூலம் நீங்கள் வங்கிச் சேவை, இன்ஷூரன்ஸ் எனப் பல விதமான வசதிகளைப் பெற முடியும். முக்கியமாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்ய முடியும்.

இந்த GIFT City மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது வெளிநாடுகளில் வசிக்கும் முதலீடு முக்கியமான இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று, இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு எந்த வரியும் கட்டத் தேவை இல்லை.

இரண்டாவது, அமெரிக்க டாலரில் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து, அந்த முதலீட்டை லாபத்துடன் மீண்டும் அமெரிக்க டாலரிலேயே திரும்ப எடுத்துக்கொள்ளலாம். இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவதை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எளிதாகத் தடுக்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் | SIP


GIFT City மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்

1. எந்தெந்த வெளிநாடுகளைச் சேர்ந்த இந்தியர்கள் முதலீடு செய்யலாம்?

2. அவர்களிடம் என்னென்ன ஆவணங்கள் இருக்க வேண்டும்?

3. என்ன மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்யலாம்?

4. முதலீடு செய்துவிட்டு, எத்தனை ஆண்டுகள் கழித்து, முதலீட்டைத் திரும்ப எடுக்கலாம்?

5. இது மாதிரி முதலீடு செய்யும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

என்பதைப் பற்றி எல்லாம் விளக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் எனில், இந்த வீடியோவைப் பாருங்கள். வீடியோவுக்கான லிங்க் இதோ... https://youtu.be/pl9R4uO7rFE?si=LW1wzYTdj1q-YKuJ

ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்

பிரபல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் ஏரியா மேனேஜர் சுமன் பாபு, GIFT City மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் GIFT City மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய தாராளமாகப் பரிசீலிக்கலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அடைய முயற்சிக்கலாம்!

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் GIFT City மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், பின்வரும் ரிலேஷன்ஷிப் மேனேஜர்களைத் தொடர்புகொள்ளலாம்.

ஏ.ஆர்.குமார் - 89259 44568

சபரிநாதன் - 89259 44569

தங்கலட்சுமி - 95007 77894

லாபம்

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

லாபம் நிறுவனத்தின் யூடியூப் சேனலைப் பார்க்க வேண்டுமா?

www.youtube.com/@labham_money

லாபம் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள கட்டுரைகளைப் படிக்க வேண்டுமா?

https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User