'புருஷன்' கோவா படப்பிடிப்பில் விஷால் காயம்; என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?

Oct 09, 2026 - 19:30
0
'புருஷன்' கோவா படப்பிடிப்பில் விஷால் காயம்; என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?

விஷால் இயக்கி நடித்த 'மகுடம்' படத்திற்குப் பின், 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார். கோவாவில் நடந்த இதன் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது விஷாலின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் செப்டம்பர் 27ம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கூட அவர் பங்கேற்கவில்லை. படப்பிடிப்பில் என்னதான் ஆச்சு? விஷால் இப்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து விசாரித்தோம்.

purushan

'மதகஜராஜா'வின் மிராக்கிள் வெற்றிக்குப் பின் சுந்தர்.சி-யின் இயக்கத்தில் 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இதில் விஷாலின் ஜோடியாக தமன்னா, யோகிபாபு நடித்து வருகின்றனர். இது தவிர சுந்தர் சி டீமின் வழக்கமான நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

சென்னையைத் தொடர்ந்து கல்கத்தா, கோவாவில் படப்பிடிப்புகள் நடந்தன. அங்கே கனல் கண்ணன் மாஸ்டரின் ஆக்ஷனில் ஏராளமான ஃபைட்டர்கள் சூழ சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விஷாலின் முதுகுத் தண்டில் அடிபட்டது. ஆனால் அவர் வலியைப் பொருட்படுத்தாமல் அன்றைய காட்சியை முடித்துக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த நாளும் படப்பிடிப்பு இருந்தது. அத்தோடு கோவா ஷெட்யூல் நிறைவுற்றது.

ஆகையால், இன்னும் ஒருநாள் தானே ஷூட்டிங். நாம கிளம்பி வந்துட்டா, சிரமம் ஏற்படும் எனக் கருதி அன்றும் சண்டைக்காட்சியில் வலியைப் பொறுத்துக் கொண்டு நடித்திருக்கிறார் என்கிறார்கள்.

இடையே வலி அதிகமாக இருக்கவே மருத்துவர்களிடம் காண்பித்திருக்கிறார் விஷால். அதனைத் தொடர்ந்து அவரை 3 வாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆகையால்தான் நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்திற்குக்கூட அவரால் வர இயலாமல் போனது.

``இதற்கு முன் நிறைய சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும் இது எதிர்பாரா விபத்து'' என்கிறார் விஷால்.

விஷால்

மருத்துவர்களின் அட்வைஸ் படி பிசியோதெரபியைத் தொடர்ந்து செய்து வருகிறார். முதுகுத் தண்டு வலியும் சரியாகி வருகிறது. இன்னும் இரண்டு வாரங்கள் ஓய்விற்குப் பின் படப்பிடிப்பில் அவர் பங்கேற்பார் என்கிறார்கள்.

இந்த ஷெட்யூல் படப்பிடிப்பு சென்னையில் இருக்கலாம் எனத் தெரிகிறது. 'புருஷன்' படத்திற்குப் பிறகும் அடுத்த படத்திற்கு கதை கேட்டுள்ளார். தீபாவளிக்கு இது குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User