NZ vs IND: 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!' - 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார்

Oct 07, 2026 - 13:00
0
NZ vs IND: 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!' - 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார்

ஒரு காலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் தவிர்க்க முடியாத பெயராக இருந்தவர் புவனேஷ்வர் குமார். புதிய பந்தை கையில் எடுத்தாலே ஸ்விங்... டெத் ஓவர்களில் பந்தை கச்சிதமாகக் கட்டுப்படுத்தும் திறன் எனத் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்.

ஆனால், காலம் அவரை இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளியது. இப்போது, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார் புவனேஷ்வர் குமார்.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் புவனேஷ்வர் குமாரின் பெயர் இடம்பெற்றிருப்பதுதான் பெரிய சர்ப்ரைஸ்.

கடந்த ஐபிஎல் சீசனில் அவர் காட்டிய பந்துவீச்சு இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஐபிஎல் 2026-ல் 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். குறிப்பாக ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு அவரது பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது.

அங்கே தொடங்கிய அவரது கம்பேக் கதை, இப்போது இந்திய அணியின் கதவை மீண்டும் திறந்திருக்கிறது. அதேபோல், காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வருண் சக்ரவர்த்தியும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

அக்டோபர் 22-ம் தேதி நியூஸிலாந்த்தின் கிறைஸ்ட்சர்ச்சில் டி20 தொடர் தொடங்குகிறது. தொடர்ந்து வெலிங்டன், ஆக்லாந்து, ஹாமில்டன் என நியூசிலாந்தின் வெவ்வேறு மைதானங்களில் மொத்தம் ஐந்து போட்டிகள் நடக்கின்றன.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்

இந்த நிலையில் “Bhuvi is back” என்கிற செய்தி வெறும் ஒரு அறிவிப்பு மட்டும் இல்லை. ஒருகாலத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த புவனேஷ்வருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பது தான் அவருடைய கம்பேக்கின் மீது எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User