Sivakarthikeyan: "I'm Not Self-Made, I'm People-Made; மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்" - எஸ்.கே

Oct 07, 2026 - 15:30
0
Sivakarthikeyan: "I'm Not Self-Made, I'm People-Made; மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்" - எஸ்.கே

சிவகார்த்திகேயன், தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் 'சேயோன்' படத்திலும், 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வு தொடர்பாக இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில், சிவகார்த்திகேயன் தன்னுடைய ரசிகர்களிடம் பேசிய முழு காணொளி தற்போது வெளியாகியிருக்கிறது.

Sivakarthikeyan
Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் பேசுகையில், "இந்த சினிமா இண்டஸ்ட்ரியில எனக்கு எந்தப் பின்புலமும் கிடையாது. தனியாவேதான் உள்ள வந்தேன். இன்னும் சொல்லப்போனா, 17 வயசுக்கு மேல கையைப் பிடிச்சு வழிகாட்ட கூட அப்பா இல்லாத ஒரு பையன்.

ஆரம்பத்துல ஏதோ ஒரு வாய்ப்பு கிடைச்சு, டிவி-ல ஒரு சின்ன எபிசோட் பண்ணலாம்னுதான் வந்தேன். ஆனா, மக்கள் அதை ஒரு சாதாரண எபிசோடா பார்க்கல. 'நம்ம பையன்பா, ஜாலியா பண்றான். இவனை ஊக்கப்படுத்துவோம்'னு சொல்லி நீங்க எல்லாரும் கைகொடுத்து கைதட்டுனீங்க.

அப்புறம் சரி, சினிமாவுக்குப் போய் சின்னச் சின்ன ரோல் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க, 'ஏன் சின்ன ரோல் பண்ணுற... நீ ஹீரோவாவே நடி!'ன்னு சொன்னீங்க.

சரி, ஹீரோனா ஏதோ சின்னச் சின்ன குட்டி படங்கள், ஜாலியான படங்கள் பண்ணலாம்னு நினைச்சப்போ, 'அதெல்லாம் கிடையாது. நீங்க எல்லா ஜானரும் பண்ணுங்க, மாஸா பண்ணுங்க'னு சொன்னீங்க. நீங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து கைகொடுத்து தூக்கிட்டு வந்து கொடுத்த இடம்தான் இது.

நிறைய பேர் என்னை 'Self-made'ன்னு சொல்றாங்க. ஆனா நிச்சயமா நான் சுயமா உருவானவன் கிடையாது. I am not self-made, I am people-made. மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்.

2012-ல நான் சினிமாவுக்குள்ள வரும்போது, எந்தச் சினிமா குடும்பப் பின்னணியும் இல்லாம வெளியே இருந்து வந்தவர்கள் நானும் விஜய் சேதுபதியும் மட்டும்தான்.

அந்தச் சமயத்துல 80 சதவீதத்துக்கும் அதிகமானவங்க சினிமா குடும்பப் பின்னணியில இருந்துதான் வந்திருந்தாங்க.

'டிவி-ல இருந்து வர்றவன் எப்படி ஹீரோ ஆகலாம்?', 'ஆங்கரிங் பண்றவன் எப்படி ஹீரோ ஆகலாம்?', 'மிமிக்ரி பண்றவன் எப்படி ஹீரோ ஆகலாம்?'னு பல கேள்விகள் இருந்தன.

Sivakarthikeyan
Sivakarthikeyan

ஆனா, தமிழ் மக்கள் அந்தக் கேள்வியை ஒருநாளும் கேட்டதே இல்லை. 'நம்மள மாதிரி ஒரு சாதாரண இடத்துல இருந்து வர்ற ஒருத்தன் ஏன் ஹீரோ ஆகக் கூடாது?'னு நினைச்சு என்னை அப்படியே தூக்கிச் சுமந்து இங்க நிக்க வச்சிருக்காங்க.

அப்படி மக்கள் எனக்குக் கொடுத்த இந்த இடத்துக்கு, பதிலுக்குத் திருப்பி ஏதாவது செய்யணும்ங்கிறதுக்காகத்தான் என்னோட அப்பா பெயரில ஜி. தாஸ் டிரஸ்டை முதல்ல ஆரம்பிச்சேன்.

அதுமூலமா நாங்க செய்ற சில உதவிகள் வெளியில தெரிஞ்சிருக்கும், சில உதவிகள் யாருக்கும் தெரியாம திருப்திக்காகப் பண்ணிட்டு இருக்கோம்" எனப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User