சென்னை பெரம்பூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

டைனமிக் அறக்கட்டளை சார்பில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ் வழங்கல்

Jun 18, 2026 - 20:16
0
சென்னை பெரம்பூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை, ஜூன் 14: டைனமிக் அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டும் விழா, ஜூன் 14ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை பெரம்பூரில் உள்ள சிம்சன் கோவிந்தராஜி அறங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பணமுடிப்பு (Cash Award), பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கல்வி தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். சுமார் 50 மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

விழாவிற்கு டைனமிக் அறக்கட்டளையின் செயலாளர் திரு. இரா. இராமலிங்கம் தலைமை தாங்கினார். திரு. மணவாளன் முன்னிலை வகித்தார். மேலும் இணைச் செயலாளர்களான திரு. எம். தமோதரன் மற்றும் திரு. எம். பூபதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர்.

நிகழ்வில் திரு. பொற்கைபாண்டியன், திரு. மகாலிங்கம், திரு. ஜி. முருகன், திரு. சரவணன் மற்றும் திரு. கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றம், எதிர்கால இலக்குகள் மற்றும் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள், சிற்றுண்டிகள், தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்று இனிதே நிறைவடைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User