`சொல்லாமலேயே வேலை செய்யும் AI'- 24/7 பிண்ணனியில் இயங்கும் Gemini Spark-ஐ அறிமுகப்படுத்திய Google
இதுவரை AI சாட்பாட்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே கவனம் செலுத்தின. ஆனால் Gemini Spark Al அதைக் கடந்து, பயனரின் சார்பாகவே செயல்படும் 24 மணி நேர AI ஏஜென்ட் என்ற புதிய AI உதவியாளரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது, Google.
Google I/O 2026 நிகழ்வில் இந்த Gemini Spark குறித்து தெரியவந்திருக்கிறது. Gemini 3.5 தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த Al Google Docs, Gmail உள்ளிட்ட Google சேவைகளுடன் இணைந்து தகவல்களைப் புரிந்துகொண்டு தேவையான பணிகளை தானாகச் செய்யும் திறன் பெற்றுள்ளது.
Gemini Al-யிலிருந்து என்ன வேறுபாடு?
பொதுவாக ChatGPT அல்லது Gemini போன்ற AI-களிடம் நாம் கேள்வி கேட்டால்தான் அவை பதில் அளிக்கும். ஆனால் Spark Al அப்படியல்ல. ஒரு வேலையை நீங்கள் ஒப்படைத்துவிட்டால், நீங்கள் மொபைலை லாக் செய்தாலும், லேப்டாப்பை ஆஃப் செய்தாலும், கிளவுட் மூலம் பின்னணியில் தொடர்ந்து இயங்கி அந்த வேலையை நிறைவேற்றும். இதுவே Spark-இன் மிகப்பெரிய பலமாக Google கூறுகிறது.
Gemini Spark Al மூலம், Gmail-ல் தேவையான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். மின்னஞ்சல் தொடர்பான பணிகளை நிர்வகிக்க உதவும். விரைவில் Spotify, Uber, OpenTable உள்ளிட்ட மூன்றாம் தரப்பு செயலிகளுடனும் இணைந்துசெயல்படும். 24 மணி நேரமும் பின்னணியில் இயங்கும் AI என்பதால் தனியுரிமை குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

இதற்கு பதிலளித்துள்ள Google, மின்னஞ்சல் அனுப்புவது, பொருள் வாங்குவது போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்கு முன் பயனரின் அனுமதியை கட்டாயமாக கேட்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் எந்த செயலிகளை, எந்த தகவல்களை Spark அணுக வேண்டும் என்பதை முழுமையாக பயனர்களே கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவில் Google Al Pro மற்றும் Google Al Ultra சந்தாதாரர்களுக்கு Gemini Spark படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிய வருகிறது. Google Al Pro திட்டம் மாதம் ₹1,950-ல் தொடங்குகிறது. Google Al Ultra திட்டங்கள் பயன்பாடு மற்றும் சேமிப்பக வசதியைப் பொறுத்து மாதம் ₹6,500 முதல் ₹19,500 வரை உள்ளன. தற்போது Google Al Plus L Gemini Spark வசதி வழங்கப்படவில்லை.
கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தாண்டி, மனிதர்களின் அன்றாட வேலைகளையே செய்து முடிக்கும் முக்கிய முன்னேற்றமாக AI ஏஜென்ட்கள் பார்க்கப்படுகின்றன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)