ஒன்றிய - மாநில உறவுக் குழு கலைப்பு: "அதிகாரச் சமத்துவத்திற்கு பேரிழப்பு" - சு.வெங்கடேசன் கண்டனம்

Nov 07, 2026 - 12:30
0
ஒன்றிய - மாநில உறவுக் குழு கலைப்பு: "அதிகாரச் சமத்துவத்திற்கு பேரிழப்பு" - சு.வெங்கடேசன் கண்டனம்

கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது அந்தக் குழுவைக் கலைத்துள்ளது தவெக அரசு.

தவெக அரசின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

“ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக ஆராய கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவைத் த.வெ.க. அரசு கலைத்துள்ளது. இதற்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சு.வெங்கடேசன் பதிவு
சு.வெங்கடேசன் பதிவு

பேரிழப்பு

பா.ஜ.க.வால் நமது அரசியல் சாசனத்தின் மீதும், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு எதிராக உருவாக்கப்படும் பெரும் கருத்தாயுதம் ஒன்றை நாம் இழக்கிறோம்.

இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, கடந்த 75 ஆண்டுகால அனுபவத்திலிருந்து இந்தியக் குடியரசை மேலும் மேன்மையுடையதாகவும், அதிகாரச் சமத்துவமுடையதாகவும் மாற்ற நினைக்கும் இந்தியர்கள் அனைவருக்குமான பேரிழப்பு.

கூடவே மன்னிப்பையும்..!

கடந்த மார்ச் மாதம் தொகுதி மறுவரையறை மசோதா சம்பந்தமான விவாதத்தின் போது இக்குழுவின் அறிக்கையை மக்களவையில் சமர்ப்பித்துப் பேசினேன். இது இந்தியாவுக்கு வழிகாட்டும் முன்மொழிவுகளைக் கொண்டது.

இக்குழுவில் இடம்பெற்ற அறிஞர்களின் பேருழைப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், கூடவே மன்னிப்பையும்.”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User