திருச்சி: 'ரூம் வாடகையோடு, மாதம் ரூ. 30,000 சம்பளம்' - டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய உதவிய இன்ஜினீயர் கைது

Oct 29, 2026 - 16:00
0
திருச்சி: 'ரூம் வாடகையோடு, மாதம் ரூ. 30,000 சம்பளம்' - டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய உதவிய இன்ஜினீயர் கைது

சென்னை தொலைத்தொடர்பு துறையிலிருந்து திருச்சியில் குறிப்பிட்ட பகுதியிலிருந்து பிராட்பேண்ட் பயன்பாடு அதீத அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். தினமும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான டேட்டா திருடப்படுவது குறித்தும் அவர்கள் கண்டறிய விசாரணையை மேற்கொண்டனர்.

அதைப் பயன்படுத்துபவர்களைப் பிடிக்க நடத்திய விசாரணையில் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருந்து திருச்சி உறையூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஹாஜா நஜிமுதீன் (வயது: 41) என்ற பொறியியல் பட்டதாரியைக் கைது செய்தனர்.

இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மேற்கு பகுதி செயலாளராக இருந்து வருகிறார். வெளிநாடு செல்பவர்களுக்கு டிக்கெட் புக் செய்து கொடுக்கும் வேலையில் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த சில சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

trichy

அவர்கள் மூலமாக சிம் பாக்ஸ் ஒன்றை வாங்கி லாட்ஜில் உள்ள அறையில் வைத்து பராமரித்து உள்ளார். லேண்ட் லைன் நம்பர் மோடம் இணைப்பு கொடுத்து, சிம்கள், இ-சிம்கள் என மொத்தம் 192 சிம் கார்டுகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையிலும் ஓர் அறையை எடுத்து சிம் பாக்ஸ் வைத்து தினமும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான டேட்டாக்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நாடு முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட சைபர் க்ரைம் குற்றங்களில் பல நூறு கோடி ரூபாயைச் சம்பாதிக்க உறுதுணையாக இருக்க உதவி செய்துள்ளார்.

இதற்காக, இவருக்கு சைபர் கிரைமில் ஈடுபடும் கும்பல் மாதம் ரூ. 30,000 சம்பளம், ரூம் வாடகை பணம் என்று கொடுத்து வந்ததாம். பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுப்பட்டு வரும் கும்பலுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User