"கலை, வாழ்வியல் பற்றி பேசினோம்; அரசியல் பேசவில்லை"- ரஜினியுடான சந்திப்பு குறித்து வைரமுத்து
ரஜினிகாந்தின் `ஜெயிலர் 2' படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து ரஜினிகாந்தை நேரில் சந்திருக்கிறார்.
இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ரஜினிகாந்த் அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்னிசை பாடும் இதயம். எதிராளிக்கு இன்பம் கடத்தும் மின்சார மனிதர் அவர். 'பார்த்து நாளாயிற்று; பார்க்க வந்தேன்; ஜெயிலர் 2 வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றேன்.

கலை பேசினோம்; வாழ்வியல் பேசினோம்; ஒரு வார்த்தைகூட அரசியல் பேசவில்லை. எப்போது வெளிவரும் சுயசரிதை என்றேன். 'வேலை நடக்கிறது; விரைவில் வெளிவரும்' என்றார். உங்கள் சுயசரிதை எதிர்பார்க்கப்படுகிறது என்றேன். 'ஏன்?' என்றார்.
பலபேருக்கு வரலாறு இருக்கிறது; உங்களுக்கு வசீகரமும் இருக்கிறது என்றேன். நான் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொண்டார்.'முதலில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் வெளிவரலாம்' என்றார்.

வந்தால் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களுள் ஒன்றாய் விளங்கும் என்றேன். பசுந்தேநீர் பருகக் கொடுத்தார். அதிலிருந்த துளசிமணம் வீடு வரும்வரை வீசியது நாசியில்" என்று ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)