பாகிஸ்தானில் Emergency நிலை: பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கட்சி ஆட்சியைக் கலைத்த ஷெபாஸ் அரசு!

Oct 12, 2026 - 09:01
0
பாகிஸ்தானில் Emergency நிலை: பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கட்சி ஆட்சியைக் கலைத்த ஷெபாஸ் அரசு!

நேற்று (அக்டோபர் 11) ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடமேற்கு கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு.

மேலும், அங்கே நடந்துகொண்டிருந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பி.டி.ஐ. (PTI) கட்சியின் ஆட்சியைக் கலைத்துள்ளது அந்த நாட்டின் அரசு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

என்ன காரணம்?

வடமேற்கு கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அந்த மாகாணத்தின் அரசு தவறிவிட்டது. இது தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மத்திய அரசு பி.டி.ஐ. கட்சியின் மீது எழுப்பிய குற்றச்சாட்டு.

இதையடுத்துதான், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி அந்த மாகாணத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, ஆட்சியையும் கலைத்துள்ளார்.

தற்போது அந்த மாகாணத்திற்கு ஆளுநர் (தற்போதைய ஆளுநர்) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது . அடுத்த ஆட்சி அமையும் வரை, அந்த மாகாணத்தை இவரே ஆள்வார்.

பின்னணி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். இவரை விடுவிக்கக் கோரி பக்தூன்க்வா மாகாணத்தில் பி.டி.ஐ. கட்சியின் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கிச் செல்ல ஒன்று திரண்டனர். இது நடந்தது கடந்த வாரம்.

அடுத்த ஒரு வாரத்திலேயே மாகாண அரசு கலைக்கப்பட்டுள்ளது.

அரசு கலைப்பு குறித்து, “அவசரநிலை என்ற போர்வையில் நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி போன்றது இது” என்று பி.டி.ஐ. கட்சி விமர்சிக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User